Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சத்து மற்றும் சுவை நிறைந்த “பூண்டு மிளகு சாதம்”

தேவையான பொருட்கள்

சாதம்                                                        –  2 கப்

உளுந்து                                                    –  ஒரு தேக்கரண்டி

வத்தல்                                                       –  6

பூண்டு                                                       –  20 பல்

கடுகு                                                          –  ஒரு தேக்கரண்டி

கடலைப்பருப்பு                                    –  ஒரு தேக்கரண்டி

வெங்காயம்                                           –  2

மிளகுப் பொடி                                      –  2 தேக்கரண்டி

உப்பு                                                          –  தேவைக்கேற்ப

எண்ணெய்                                             –  தேவையான அளவு

கொத்தமல்லி கறிவேப்பிலை      –  சிறிதளவு

செய்முறை

  • பூண்டு வெங்காயம் கொத்தமல்லி இவைகளை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
  • அடுப்பில் கடாயை வைத்து முதலில் நெய் ஊற்றவும்.
  • நெய் உருகியதும் கடலைப்பருப்பு உளுந்து கடுகு சேர்த்து தாளிக்கவும்.
  • அதனுடன் வத்தல், கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
  • நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தையும் போட்டு நன்றாக வதக்கவும்.
  • வெங்காயம் பொன்னிறமானதும் நறுக்கி வைத்த பூண்டை போட்டு  தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கவும்.
  • பின்னர் எடுத்து வைத்துள்ள சாதத்தை போட்டு நன்றாக கிளறி விடவும்.
  • இறுதியாக மிளகுத் தூள் சேர்த்து  கொத்தமல்லியைத் தூவி இரண்டு நிமிடங்கள் காத்திருந்து இறக்கிவிடலாம்.
  • சத்து நிறைந்த பூண்டு மிளகு சாதம் தயார்.

Categories

Tech |