தேவையான பொருட்கள்
வெங்காயம் – 10
புளி – எலுமிச்சை பழ அளவு
பூண்டு – 15
சாம்பார் பொடி – 4 மேசைக்கரண்டி
நல்லெண்ணெய் – 4 மேசைக்கரண்டி
பெருங்காயம் – 1/2 தேக்கரண்டி
வெந்தயம் – 1/2 தேக்கரண்டி
கடுகு – 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை – சிறிதளவு
உப்பு – தேவைக்கேற்ப
செய்முறை
- முதலில் புளியை நன்றாக வெதுவெதுப்பான நீரில் போட்டு ஊற வைத்து பின்னர் வடிகட்டி வைத்துக் கொள்ளவும்.
- வானொலி ஒன்றை அடுப்பில் வைத்து தேவைக்கேற்ப எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு கடுகு வெடித்ததும் வெந்தயத்தை சேர்க்கவும்.
- அதனுடன் கறிவேப்பிலை பெருங்காயம் வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து நன்றாக வதக்கவும்.
- வதங்கியதும் சாம்பார் பொடி சேர்த்து மீண்டும் வதக்கவும்.
- இறுதியாக வடிகட்டி வைத்துள்ள புளிக்கரைசலை ஊற்றி தேவையான அளவு தண்ணீர் சேர்த்து தேவைக்கேற்ப உப்பு போட்டு நன்றாக கொதிக்க வைக்கவும்.
- கொதித்ததும் எண்ணெய் பிரிந்து வருகையில் இறக்கிவிடவும்.
- சுவைமிக்க வெங்காயம் பூண்டு குழம்பு தயார்.