பூண்டு சூப்
தேவையானப் பொருட்கள் :
புளித் தண்ணீர் – 1 கப்
பூண்டு – 10 பற்கள்
மிளகு – 2 ஸ்பூன்
சீரகம் – 2 ஸ்பூன்
மல்லித்தழை, கருவேப்பிலை , உப்பு – தேவைக்கேற்ப
வெண்ணெய் – சிறிது
செய்முறை:
முதலில் புளித்தண்ணீரைக் கொதிக்க விட்டுக் கொள்ள வேண்டும் . பின் மிளகு, சீரகம், பூண்டு,கருவேப்பிலை ஆகியவற்றை மிக்ஸியில் விழுதாக அரைத்துக் கொள்ள வேண்டும் . அரைத்த விழுதை புளித்தண்ணீரில் சேர்த்து வெண்ணெய், உப்பு சேர்த்து கொதிக்க விட்டு மல்லித்தழை தூவி இறக்கினால் சுவையான பூண்டு சூப் தயார் !!!