உங்கள் எரிவாயு இணைப்பு மற்றும் ஆதார் எண்ணை இணைக்க வில்லை என்றால் மானிய தொகை வங்கிக் கணக்கில் வராது.
உங்கள் கேஸ் இணைப்புடன் ஆதார் எண்ணை கட்டாயமாக்க வேண்டும். அவ்வாறு இணைக்க வில்லை என்றால் உங்கள் மானியத்தொகை உங்கள் வங்கி கணக்கில் வராது. அதனால் உடனே உங்கள் ஆதார் எண்ணை எரிவாயு இணைப்புடன் இணைக்க வேண்டும். அதனை நீங்கள் வீட்டிலிருந்தே செய்து முடிக்க முடியும். அதன்படி உங்கள் எரிவாயு நிறுவனத்திற்கு ஆன்லைன் மூலமாகவும், IVRS மூலமாகவும் இதனை செய்து முடிக்கலாம். அதில் குறிப்பாக எஸ்எம்எஸ் மற்றும் வாடிக்கையாளர் பராமரிப்பு ஆகியவற்றில் அழைப்பை இணைப்பது மிகவும் எளிது.
SMS மூலமாக உங்கள் ஆதார் எண்ணை இணைப்பதற்கு, முதலில் உங்கள் மொபைல் எண்ணை இந்தேன் gas ஏஜென்சியில் பதிவு செய்ய வேண்டும் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். மொபைல் எண் பதிவு இல்லாமல் நீங்கள் எரிவாயு இணைப்பு மற்றும் ஆதார் எண்ணை இணைக்க முடியாது. உங்களின் பதிவு செய்யப்படவில்லை என்றால் ஒரு எஸ்எம்எஸ் அனுப்பப்பட வேண்டும். அதில் IOC <✓எஸ்டிடி கேட் ஆப் கேஸ் ஏஜென்சியின் தொலைபேசி எண்> <வாடிக்கையாளர் எண்> என்று டைப் செய்ய வேண்டும்.
இதனை அனுப்பிய உடன் உங்களின் எரிவாயு நிறுவனத்தில் பதிவு செய்யப்படும். அதன்பிறகு நீங்கள் ஆதார் எண் மற்றும் எரிவாயு இணைப்பை இணைக்க SMS அனுப்ப வேண்டும். அதற்காக UID <ஆதார் எண்> என்று டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்ப வேண்டும். அதன் பிறகு உங்கள் எரிவாயு இணைப்பு ஆதார் எண்ணுடன் இணைக்கப்படும். இறுதியாக மொபைல் தொலைபேசியில் உறுதிப்படுத்துதல் செய்தி கிடைக்கும்.
இதனை அடுத்து அழைப்பு மூலமாக ஆதார் எண்ணை இணைக்க, எரிவாயு இணைப்பை எடுத்திருந்தால் ஆதார் உடனான எரிவாயு இணைப்பை ஒரு தொலைபேசி அழைப்பு மூலம் இணைக்கலாம். பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து 1800 2333 555 என்ற எரிவாயு இணைப்புடன் அழைக்க வேண்டும். அதன் பிறகு உங்கள் ஆதார் எண்ணைக் கூறி எரிவாயு இணைப்பை உறுதி செய்து கொள்ளலாம்.