Categories
உலக செய்திகள்

எரிவாயு கட்டணங்களை அரசு ஏற்குமா?… அது மாயை.. நடக்காது… எச்சரிக்கும் டோரி எம்.பி…!!!

பிரிட்டன் நாட்டின் டோரி எம்பி சர் டெஸ்மண்ட் ஸ்வெய்ன் மக்களிடம், அரசு எரிவாயுவிற்கான கட்டணத்தை கொடுக்கும் என்று கூறுவது மாயை, அது நடக்காது என்று கூறியிருக்கிறார்.

பிரிட்டனில் பணவீக்கம் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. எனவே, நாட்டில் சராசரி குடும்பத்திற்கு ஒரு ஆண்டிற்கான கட்டணம்,  £1,971 முதல் £3,549-ஆக அதிகரிக்கும் எனவும் எரிசக்திக்கான விலை வரம்பானது அக்டோபர் மாதத்திற்குள் 8% வரை அதிகரிக்கும் ஆபத்து உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது.

இவ்வாறு உயர்ந்து கொண்டிருக்கும் கட்டணத்திற்கான நெருக்கடிக்கு இடையே கூடுதலாக குளிர்கால எரிபொருள் அளிக்க தயாராக உள்ளோம் என்று பிரதமர் போட்டியிலிருக்கும் ரிஷி சுனக் மற்றும் லிஸ் ட்ரஸ் ஆகிய இருவரும் கூறிக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில், நாட்டின் டோரி எம்.பி சர் டெஸ்மண்ட் ஸ்வெய்ன், எரிவாயுவிற்கான கட்டணத்தை அரசு ஏற்கும் என்னும் மாயையில் இருக்கக் கூடாது, அது நடக்காது. மக்கள் அதிகமான விலைகளோடு தான் வாழ வேண்டி இருக்கும் என்று கூறியிருக்கிறார்.

Categories

Tech |