Categories
தேசிய செய்திகள்

GAS சிலிண்டர் புக்கிங்…… புதிய நடைமுறை….. இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு….!!

இனி சமையல் கியாஸ் சிலிண்டர்களை  வாட்ஸ்அப் செயலி மூலமும் முன்பதிவு செய்யலாம் என்று இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்தியா முழுவதும் சமையல் கியாஸ் சிலிண்டரை பதிவு செய்யப்பட்ட தொலைபேசி எண்னை கொண்டு  கால் மூலமாகவும், மெசேஜ் மூலமாகவும் முன் பதிவு செய்யலாம் என்ற நடைமுறை இருந்து வருகிறது.

இந்நிலையில்  75888 88824 என்ற வாட்ஸ்அப் என்மூலம் சிலிண்டரை இனி வரக்கூடிய காலங்களில் முன் பதிவு செய்யலாம் என்ற புதிய முறையை இந்தியன்  ஆயில் நிறுவனம் அறிவித்துள்ளது. ஏற்கனவே பதிவு செய்திருந்த எண்ணில் இருந்து தான் வாட்ஸ் அப் எண்ணிற்கு கேஸ் சிலிண்டரைமுன்  பதிவு செய்ய வேண்டும் என்றும் அது முக்கிய குறிப்பாக தெரிவித்துள்ளது.

Categories

Tech |