Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

ஒரு நிமிடத்தில் நிலைகுலைந்த மனைவி…. மிரட்டுவதற்காக கணவர் செய்த செயல்…. கோவையில் பரபரப்பு….!!

மனைவியை மிரட்டுவதற்காக கணவர் சிலிண்டரை வெடிக்க வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சூலூர் பகுதியில் தாமோதரன் என்ற கூலித்தொழிலாளி வசித்து வருகிறார். இவருக்கு அமுதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் மது குடித்துவிட்டு தாமோதரன் அடிக்கடி தனது மனைவியுடன் சண்டை போட்டதால் கோபத்தில் அமுதா அவரது உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டார். இதனையடுத்து அமுதாவை தொடர்பு கொண்ட தாமோதரன் தன்னுடன் சேர்ந்து வாழ வருமாறு அழைத்துள்ளார்.

ஆனால் அதற்கு அமுதா மறுப்பு தெரிவித்துள்ள நிலையில் மீண்டும் செல்போன் மூலம் அமுதாவை தொடர்பு கொண்ட தாமோதரன் தற்கொலை செய்துகொள்ளப் போவதாக மிரட்டி விட்டு போனை துண்டித்து விட்டார். இதனால் தனது குழந்தைகளை அழைத்துக் கொண்டு அமுதா சென்றபோது, தாமோதரன் வீட்டில் இருந்த கேஸ் சிலிண்டரை திறந்து விட்டு தற்கொலை செய்து கொள்ளப் போவதாக மிரட்டியுள்ளார். அந்த சமயம் சிலிண்டரில் இருந்து கேஸ் வெளியேறிக் கொண்டிருந்தால் அமுதா உடனடியாக தனது கணவர் மற்றும் குழந்தைகளை வீட்டிற்கு வெளியே இழுத்துச் சென்றுள்ளார்.

இதனை அடுத்து திடீரென பயங்கர சத்தத்துடன் கேஸ் சிலிண்டர் வெடித்து சிதறியதில் அவரது வீட்டின் ஒரு பகுதி இடிந்து விழுந்துவிட்டது. இதுகுறித்து தகவலறிந்த சிங்காநல்லூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தியபோது, தாமோதரன் தனது மனைவியை மிரட்டுவதற்காகவே இவ்வாறு கேஸ் சிலிண்டரை வெடிக்க வைத்தது தெரிய வந்துள்ளது. இதனால் தாமோதரனை காவல்துறையினர் எச்சரித்து அனுப்பி வைத்துள்ளனர்.

Categories

Tech |