Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

திடீரென வெடித்த கியாஸ் சிலிண்டர்…. அதிர்ச்சியடைந்த உரிமையாளர்…. தீயணைப்பு துறையினரின் தீவிர முயற்சி….!!

கியாஸ் சிலிண்டர் வெடித்து கார் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்லடம் சாலையில் சேகர் என்பவர் பொருட்கள் வாங்குவதற்காக காரை ஓட்டி வந்துள்ளார். இந்நிலையில் தமிழ்நாடு தியேட்டர் அருகில் வந்து கொண்டிருந்தபோது திடீரென காரில் கோளாறு ஏற்பட்டு தீ பிடித்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த சேகர் காரிலிருந்து கீழே இறங்கினார். இதுகுறித்து சேகர் திருப்பூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார்.

அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்புதுறையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதனையடுத்து தீயணைப்பு துறையினர் அரை மணி நேர போராட்டத்திற்கு பின்பு தீயை முற்றிலுமாக அணைத்தனர். இதனை தொடர்ந்து காரில் இருந்த கியாஸ் சிலிண்டர் வெடித்து தீப்பிடித்தது தெரியவந்துள்ளது. மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த வீரபாண்டி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |