Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

எங்களுக்கு இதெல்லாம் வேணும்… ஊழியர்களின் திடீர் போராட்டம்… அதிகாரிகளின் பேச்சுவார்த்தை…!!

பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து கேஸ் சிலிண்டர் ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

திருநெல்வேலி மாவட்டத்தில் அனைத்து எல்.பி.ஜி நிர்வாக அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் திடீர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தற்போது கொரோனா தொற்றின் காலகட்டத்திலும் கேஸ் சிலிண்டர்களை வீடு வீடாக சென்று ஊழியர்கள் விநியோகித்து வருகின்றனர். எனவே தமிழக அரசு கேஸ் சிலிண்டர்கள் விநியோகிக்கும் ஊழியர்களை முன்கள பணியாளர்களாக அறிவிக்க வேண்டுமென ஊழியர்கள் கோஷங்களை எழுப்பியுள்ளனர்.

இதனை அடுத்து முன் களப் பணியாளர்களுக்கு வழங்கக்கூடிய அனைத்து சலுகைகளையும் தங்களுக்கும் வழங்க வேண்டும் எனவும், கேஸ் நிறுவன ஊழியர்களுக்கு இ.எஸ்.ஐ மற்றும் பி.எஃப் பணம் பிடித்தம் செய்ய வேண்டும் எனவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளனர். இதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தங்களின் கோரிக்கையை ஒரு மனுவாக எழுதி எம்.எல்.ஏ வான அப்துல்வகாபிடம் கொடுத்துள்ளனர். அதன்பின் எம்.எல்.ஏ உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்த பின்னர் போராட்டத்தை ஊழியர்கள் கைவிட்டு கலைந்து சென்றுள்ளனர்.

Categories

Tech |