Categories
உலக செய்திகள்

எரிவாயு சேமிப்பு டேங் வெடித்து சிதறியது.. தொழிலாளர்கள் படுகாயங்களுடன் மீட்பு.. ரஷ்யாவில் பயங்கரம்.!!

ரஷ்யாவில் எரிவாயு சேமிப்பு நிலையத்தில் வெடி விபத்து ஏற்பட்டு சுமார் 33 நபர்கள் பலத்த காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சைபீரியாவில் இருக்கும் நோவோசிபிக்கில் என்ற நகரத்தில் எரிவாயு சேமிப்பு கிடங்கு உள்ளது. அங்கு பணியாளர்கள் எரிவாயு நிரப்பும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென்று ஒரு எரிவாயு டேங் வெடித்துச் சிதறிவிட்டது. உடனடியாக அங்கிருந்த பணியாளர்களும் வாடிக்கையாளர்களும் பதறியடித்து ஓடியுள்ளனர்.

நெருப்பு குழம்பானது, சுமார் 1,000 மீட்டர் சுற்றளவிற்கு பரவிவிட்டது. இதில் தொழிலாளர்கள் 33 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் 7 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

Categories

Tech |