சுவிட்சர்லாந்து அரசு, எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதால் அதிகமாக எரிவாயு பயன்படுத்தும் மக்களுக்கு சிறை தண்டனை அளிக்க திட்டமிடப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பா முழுக்க எரிவாயு தட்டுப்பாடு அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் குளிர்காலத்தை சமாளிக்க நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கும் எரிவாயு குறித்த விதிமுறைகளை மீறும் நபர்களுக்கு சிறை தண்டனை அளிக்க சுவிட்சர்லாந்து அரசு திட்டமிட்டு கொண்டிருக்கிறது.
அதன்படி விதிமுறைகளை மீறும் நபர்களுக்கு மூன்று வருடங்கள் சிறைத்தண்டனை அல்லது அபராதங்கள் விதிக்கப்படலாம் என்று கூறப்பட்டிருக்கிறது. புதிதாக நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கும் விதிமுறைகளின் படி, எரிவாயு மூலமாக கட்டிடங்களை வெப்பமாக்கும் வசதியுடைய பகுதிகளில் அதிகமாக 19 டிகிரி செல்சியஸ் வரை வெப்பப்படுத்திக் கொள்ளலாம்.
அதற்கு மேல் பயன்படுத்தக் கூடாது. மேலும் நீரை 60 டிகிரி செல்சியஸ் வரை வெப்பப்படுத்திக் கொள்ளலாம். இந்த விதிமுறைகளை மீறி நடக்கும் மக்கள், 30 சுவிஸ் பிராங்குகளிலிருந்து, 3000 சுவிஸ் பிராங்குகள் வரை அபராதம் செலுத்த வேண்டியிருக்கும் என்று பெடரல் நீதித்துறை செய்தி தொடர்பாளர் கூறியிருக்கிறார்.