Categories
அரசியல் தேசிய செய்திகள்

“கவுதம் கம்பீருக்கு நோட்டீஸ்” தேர்தல் நடத்தை விதி மீறியதாக குற்றசாட்டு ….!!

பாஜக வேட்பாளர் கவுதம் கம்பீதேர்தல் நடத்தை விதி மீறலில் ஈடுபட்டதாக டெல்லி கிழக்கு மக்களவை தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் நோட்டீஸ்அனுப்பியுள்ளார்.

டெல்லி கிழக்கு மக்களவை தொகுதியில் பாஜக கட்சியின் சார்பில் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் வேட்பாளராக போட்டியிடுகிறார். இந்நிலையில், இவர்  கடந்த ஏப்ரல் 26-ஆம் தேதி ஆங்கில செய்தித்தாள்களில் வெளியிடப்பட்ட கிரிக்பிளே என்ற செயலியை  பிரபலப்படுத்தும் முழு பக்க விளம்பரத்தில் இடம்பெற்றிருந்தார்.  இதை கண்காணித்த ஊடகக் கண்காணிப்புக் குழு  இந்த விளம்பரம் தேர்தல் நடத்தை  விதி முறைகளை  மீறியுள்ளதாக கருதினர்.

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக வேட்பாளர் கவுதம் கம்பீருக்கும், அந்த விளம்பரத்தை வெளியிட்ட நிறுவனத்துக்கும் கிழக்கு டெல்லி மக்களவைத் தொகுதியின்  தேர்தல் நடத்தும் அதிகாரி நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில் , செய்தித்தாளில் விளம்பரம் வெளியிடப்பட்டதற்காக தேர்தல் ஆணையத்தின் ஊடகக் கண்காணிப்புக் குழுவிடம் அனுமதி பெற்ற விவரத்தினை மே மாதம் 2-ஆம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் எனவும் , தவறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Categories

Tech |