விஜய்யின் தளபதி 65 திரைப்படத்தில் கவின் நடிக்கப் போகிறார் என்ற தகவல் உறுதியாகியுள்ளது.
பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் பிரபலமானவர் கவின். அதன்பின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி விட்டார். இதைத்தொடர்ந்து கவின் தற்போது “லிப்ட்” எனும் படத்தில் நடித்து வருகிறார்.
இதற்கிடையில் கவின் விஜயின் “தளபதி 65” படத்தில் நடிக்கப் போகிறார் என்ற தகவல் வெளியானது. அதற்கேற்றவாறு இன்று நடந்த தளபதி 65 படத்தின் பூஜையில் கவின் கலந்துகொண்டுள்ளார். ஆகையால் கவின் இப்படத்தில் நடிக்கிறார் என்பது உறுதியாகியுள்ளது.