காயத்ரி ரகுராம் ஜூலை 12ஆம் தேதி நேரில் ஆஜராக கூறி சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனை அவதூறாக பேசி நேரில் வந்து என்னை மிரட்டி பாருங்கள் என்று சவால் விடுத்தார். இந்த கருத்து சர்ச்சையானது தொடர்ந்து அவருக்கு எதிராக கண்டனம் தெரிவித்து வந்தனர். பின்னர் திருமாவளவனும், காயத்ரி ரகுராம் டுவிட்டரில் ஒருவரை ஒருவர் விமர்சித்து கொண்டனர்.
ஒருவரை ஒருவர் மிகவும் கடுமையாக விமர்சித்து பேசிக் கொண்டனர். இதன் காரணமாக காயத்ரியின் வீட்டை வீசிக கட்சியை சேர்ந்தவர்கள் முற்றுகையிட்டனர். இது தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இதைத் தொடர்ந்து தற்போது நடிகையும் பாஜக பூர்வமான காயத்ரி ரகுராம் ஜூலை 12 ஆம் தேதி நேரில் ஆஜராக கூறி சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.