Categories
கிரிக்கெட் விளையாட்டு

கெயில் ருத்ரதாண்டவம்….. மந்தீப் சிங் அதிரடி ஆட்டம்…. மண்ணைக்கவ்விய கேகேஆர் ….!!

கொல்கத்தா –  பஞ்சாப் அணி மோதிய ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ஐபிஎல் தொடரின் 46வது லீக் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் VS  கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி மோதியது. டாஸ் வென்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனால் முதலில் களமிறங்கிய கொல்கத்தா அணியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இயான் மோர்கன் – சுப்மன் கில் ஆட்டத்தால் என் கணிசமாக உயர்ந்தது.

சுப்மன் கில் 57, இயான் மோர்கன் 40 எடுக்க அந்த அணி 20 ஓவர்களில்  149 ரன் எடுத்தது. 150 எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய பஞ்சாப் அணியின் கேப்டனும், தொடக்க ஆட்டக்காரரான கேஎல் ராகுல் சிறப்பான தொடக்கம் கொடுத்தார். 28 ரன்களில் கேஎல் ராகுல் ஆட்டமிழக்க மந்தீப் சிங்குடன் ஜோடி சேர்ந்த கிரிஸ் கெயில் வழக்கமாக வாணவேடிக்கை நிகழ்த்தினார்.

சிறப்பான ஆட்டம் வெளிப்படுத்திய இருவரும் அரைசதம் அடித்தனர். ஐபிஎல் தொடரில் ஆறாவது அரைசதத்தை கடந்தார் மந்தீப் சிங். மறுமுனையில் 30ஆவது ஐபிஎல் அரைசதத்தை பதிவு செய்தார் கெயில். இறுதியில் 18.5 கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பஞ்சாப் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. அதிகபட்சமாக கிறிஸ் கெயில் 50 ரன்னும், மந்தீப் சிங் 66 என்னும் எடுத்தனர்.

Categories

Tech |