ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் விரைவாக 4,000 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற சாதனையை அதிரடி மன்னன் கெய்ல் படைத்துள்ளார்.
2019 ஐ.பி.எல் கிரிக்கெட் 4ஆவது லீக் போட்டி ஜெய்ப்பூரில் நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதியது. இந்த போட்டி யில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி பஞ்சாப் அணி களமிறங்கி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் குவித்தது. அதிக பட்சமாக கிறிஸ் கெயில் அதிரடியாக விளையாடி 79 (47) , ரன்கள் (4 சிக்ஸர், 8 பவுண்டரி) விளாசினார் சர்பிராஸ் கான் 29 பந்தில் 46 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.
இதையடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 170 ரன்கள் மட்டுமே குவித்தது. இதனால் பஞ்சாப் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ராஜஸ்தான் அணியில் அதிகபட்சமாக ஜாஸ் பட்லர் 43 பந்துகளில் 69 ரன்கள் (2 சிக்ஸர், 10 பவுண்டரிகள்) விளாசினார்.
இந்நிலையில் இந்த போட்டியில் கெய்ல் முதல் 6 ரன்களை எடுக்கும் பொது 4000 ரன்களை தொட்டார். இதன் மூலம் ஐபிஎல்லில் 4000 ரன்களை கடந்த 9வது வீரர் என்ற பெருமையையும், 2ஆவது வெளி நாட்டு வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். கெயிலுக்கு முதலாக டேவிட் வார்னர் 4000 ரன்களை கடந்துள்ளார். 4000 ரன்கள் அடித்த கெயிலுக்கு கிடைத்த கெத்து என்னவென்றால் 112 இன்னிங்ஸில் 4000 ரன்களை கடந்துள்ளார். இதன் மூலம் ஐபிஎல்லில் அதிவேகமாக 4000 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற பெருமைக்கு சொந்தக்காரரானார். மேலும் டேவிட் வார்னர் 114, விராட் கோலி 128 இன்னிங்சிலும், ரெய்னா மற்றும் கெளதம் காம்பீர் தலா 140 இன்னிங்சிலும் 4, 000 ரன்களை கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.