இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் இது தொர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்தியாவில் 2014ஆம் ஆண்டு 281.58 மில்லியனாக இருந்த டேட்டா பயன்படுத்துவோரின் எண்ணிக்கை, நான்கு ஆண்டுகளில் இரட்டிப்பாகி 664.80 மில்லியனாகியுள்ளது.
இதுமட்டுமின்றி, 2014ஆம் ஆண்டு 828 மில்லியன் ஜிபி-ஆக இருந்த டேட்டா பயன்பாடு, வெறும் நான்கு ஆண்டுகளில் பன்மடங்கு உயர்ந்து 2018-19 ஆண்டில் 46,404 ஜிபி-ஆக உள்ளது. இந்தாண்டு இந்த எண்ணிக்கை இன்னும் உயர்ந்துள்ளது. இந்தாண்டு செப்டம்பர் மாதம்வரை மட்டும் இந்தியர்கள் 54,917 மில்லியன் ஜிபி டேட்டாவை உபயோகப்படுத்தியுள்ளனர்.
கடந்த நான்கு ஆண்டுகளில் இந்தியர்களின் டேட்டா தாங்கள் நினைத்ததைவிட பன்மடங்கு உயர்ந்துள்ளதாக டிராய் தெரிவித்துள்ளது. டேட்டாவுக்கான கட்டணங்கள் குறைக்கப்பட்டதும், பெரும்பாலான இடங்கள் 2ஜி-யில் இருந்து 4ஜி தொழில்நுட்பத்துக்கு மாறியதுமே, இதற்கு முக்கியக் காரணமாக கருதப்படுகிறது. 2016ஆம் ஆண்டுக்கு முன் வரை மொத்தமே 4,642 மில்லியன் டேட்டாவை மட்டுமே மக்கள் பயன்படுத்தியிருந்த நிலையில், 2018இல் ஒரே ஆண்டில் 46,406 மில்லியன் டேட்டாவை மக்கள் பயன்படுத்தியுள்ளனர்.