மிதுனம் ராசி அன்பர்கள்…!! இன்று வெற்றி நடை போடும் நாளாக இருக்கும். அரசாங்க வழியில் உங்களுக்கு அனைத்துச் செயலும் ரொம்ப நல்லபடியாகவே நடக்கும். எதிர்பார்த்த காரியங்கள் அனுபவங்களை கொடுக்கும். பிள்ளைகள் வழியில் நல்ல செய்திகள் கிடைக்கும். வெளியூர் பயணம் நல்லபடியாக அமையும். வெளிநாட்டிலிருந்து நல்ல தகவல்கள் வந்துசேரும். ஏற்றுமதி தொழிலில் உள்ளவர்களுக்கு இன்று ஒரு உன்னதமான நாளாகவே இருக்கும். அதுமட்டுமில்லாமல் மற்றவர்களிடம் நீங்கள் கேட்ட பணம் உதவி கண்டிப்பாக இன்று கிடைக்கும்.
காரியத்தில் பரிபூரணமான பலனை பெறுவீர்கள். இன்று பணிகளை உற்சாகத்துடன்முடிப்பீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு இன்று முன்னேற்றமான நாளாகவே அமையும். அவர்களுக்கு வருமானம் இருமடங்காகும். முயற்சிகல் வெற்றியைக் கொடுக்கும் இன்று திருமணம் ஆகாதவர்களுக்கு திருமண முயற்சியை மேற்கொள்ளுங்கள் ரொம்ப சிறப்பாக இருக்கும். காதலைப் பொறுத்தவரை எந்தவித பிரச்சினையும் இல்லை ரொம்ப சிறப்பாகவே இருக்கும். காதல் கைகூடும் நாளாகவும் இருக்கும். உடல் ஆரோக்கியம் சிறந்த அளவில் இருக்கும் ஆனால் சரியான நேரத்திற்கு மட்டும் தூங்கச் செல்லுங்கள்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சூரிய பகவான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்து காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.
அதிர்ஷ்ட திசை கிழக்கு
அதிர்ஷ்ட எண் 5 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம் பச்சை மற்றும் நீல நிறம்