மிதுனம் ராசி அன்பர்களே..!! உங்கள் அணுகுமுறையில் மாற்றம் இன்று நிகழும். நல்ல பலன்களை இன்று அள்ளி செல்வீர்கள். விலகிச் சென்ற உறவினர் விரும்பி சொந்தம் பாராட்ட கூடும். தொழில் வியாபாரம் செழித்து புதிய பரிமாணம் உருவாகும். நிலுவைப்பணம் வசூலாகும். விருந்து விழாவில் பங்கேற்பார்கள். இன்று எதிர்பார்த்த நிதியுதவி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பரபரப்பு நீங்கி அமைதியாக பணியை கவனிப்பார்கள். சக ஊழியர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும். குடும்பத்திலிருந்த பிரச்சினைகள் அனைத்தும் நீங்கும்.
கணவன் மனைவிக்கிடையே இருந்த சங்கடங்கள் தீரும். கலைத்துறையினர் படைப்பு திறன் உயரும். உங்களை அலட்சிய படுத்தியவர்கள் உங்களிடம் வந்து சரணடைய கூடும். உங்களைப் பார்த்து வியக்க கூடும். மற்றவர்கள் பொறாமைப்பட வைக்கக்கூடிய அளவுக்கு உங்களது செயல்பாடுகள் இருக்கும். இன்று மாணவக் கண்மணிகள் மட்டும் கல்வியில் கொஞ்சம் கடினமாக உழைதது தான் பாடங்களை படிக்க வேண்டியிருக்கும்.
கூடுமானவரை படிப்பில் கவனம் செலுத்துவது நல்லது. இன்று நீங்கள் வெளியில் செல்லும்பொழுது வெள்ளை நிற ஆடையை அணிந்து கொண்டு செல்லுங்கள். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக்கூடியதாக இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டால் அனைத்துக் காரியமும் சிறப்பாகவே நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் பச்சை நிறம்