எப்பொழுதுமே மற்றவர்களை கலகலப்பாக வைத்துக் கொள்ளும் மிதுன ராசி அன்பர்களே..!! இன்று நண்பர் உங்களை பெருமைப்படுத்துவார். ஆன்மீக உரையாடலில் கலந்து கொள்வீர்கள். தொழில் வியாபாரம் செழித்து வாழ்வில் நம்பிக்கை வளரும். நிலுவைப்பணம் வசூலாகும். இன்று தேவையில்லாத விவகாரத்தில் மட்டும் தலையிட வேண்டாம். அந்த விஷயத்தில் மட்டும் கொஞ்சம் கவனமாக இருங்கள். இன்று நீங்கள் ஆராய்ந்து செய்யும் காரியங்கள் சாதகமான பலனை கொடுக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாகவே இருக்கும். இன்று மருத்துவம் சார்ந்த செலவுகள் கொஞ்சம் வரக்கூடும். அந்த விஷயத்தில் கவனமாக இருங்கள். அதாவது வாகனத்தில் செல்லும்போது மட்டும் கொஞ்சம் கவனமாக இருங்கள். ஆயுதங்களை கையாளும் பொழுது வாகனத்தை ஓட்டும்போது ரொம்ப எச்சரிக்கையாக ஓட்ட வேண்டும். அடுத்தவருக்கு உதவ போய் வீண்பழி கொஞ்சம் ஏற்படக்கூடும் பார்த்துகொள்ளுங்கள்.
உங்களைச் சார்ந்தவர்கள் உங்களை தவறாக நினைக்கலாம். அந்த விஷயத்தில் கொஞ்சம் கவனமாக நடந்து கொள்ளுங்கள். இன்று குடும்பத்தாருடன் வெளியிடங்களுக்கு சென்று வரும் வாய்ப்புக்கள் இருக்கும். இன்று மன மகிழ்ச்சியும் கலகலப்பும் இருக்கும். இன்று மாணவர்கள் கல்வியில் முன்னேற்றமடைய கொஞ்சம் கூடுதலாக உழைக்க வேண்டும். பாடங்களில் மட்டும் கவனத்தை செலுத்துங்கள். அது போதும். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும்போது முக்கியமான காரியத்திற்கு செல்லும் பொழுது பச்சை நிற ஆடையோ அல்லது பச்சை நிறத்தில் கைக்குட்டையை எடுத்துச் செல்லுங்கள். அனைத்துக் காரியமும் சிறப்பாக இருக்கும். அதுபோலவே இன்று நீங்கள் 18-சித்தர்கள் உள்ள படத்தை வணங்கி இன்றைய நாளை தொடங்கினால் அனைத்து விஷயங்களுமே சிறப்பாக இருக்கும். மனமும் மகிழ்ச்சியாகவே காணப்படும்.
இன்று உங்களுக்கான அதிஷ்ட திசை : கிழக்கு
அதிஷ்ட எண் : 2 மற்றும் 3
அதிர்ஷ்ட நிறம் : நீலம் மற்றும் பச்சை நிறம்