அடிக்கடி காதலில் வயப்படக்கூடிய மிதுனராசி அன்பர்களே..!! இன்று விஐபிக்களின் சந்திப்பால் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். வீடு இடம் வாங்கும் முயற்சி கைகூடும். அன்பு நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். வாங்கல்- கொடுக்கல்களில் ஆதாயம் கிடைக்கும். இன்று அடுத்தவர்களுக்காக எந்த பொறுப்பையும் ஏற்காமல் இருப்பது நல்லது. நண்பர்கள் உறவினரிடம் இருந்து வந்த பிரச்சனைகள் விலகி செல்லும். பெண்களால் இருந்த தொல்லைகள் மறைந்து நிம்மதி பிறக்கும். பண தேவைகள் ஓரளவு பூர்த்தியாகும். அண்டை அயலாரின் ஆதரவு கிடைக்கும். குறுகிய பயணங்கள் அதிகரிக்கும். பயணங்களின் பொழுது மட்டும் கொஞ்சம் கவனமாக இருங்கள். பொருட்கள் மீது கவனமாக இருங்கள்.
இன்று மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றத்தை பெறக்கூடும். இன்று ஆசிரியர்களின் சொல்படி மட்டும் நடந்து கொள்ளுங்கள். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் போதோ முக்கியமான காரியத்திற்கு செல்லும்போதோ பச்சை நிற ஆடை அல்லது பச்சை நிறத்தில் கைக்குட்டையை எடுத்துச் செல்லுங்கள் அனைத்தும் நல்லபடியாகவே நடக்கும். அதுபோல இன்று நீங்கள் காலையில் எழுந்ததும் காக்கைக்கு அன்னமிட்டு இன்றைய நாளை தொடங்கினால் அனைத்தும் சிறப்பாக இருக்கும். தயவுசெய்து இதை மட்டும் நீங்கள் முயற்சி செய்து பாருங்கள்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம் : நீலம் மற்றும் பச்சை நிறம்