மிதுனம் ராசி அன்பர்களே..!! இன்று புதிய வேலைக்கான வாய்ப்பு உங்களுக்கு உருவாகும். விருப்பத்திற்கு மாறாகவே எண்ணிய காரியங்கள் கொஞ்சம் நடக்கும். பொறுமையை மட்டும் இழந்து விடாதீர்கள். வழக்குகளை ஒத்திப் போடுவது நல்லது. வாகன சுகம் குறையும். இன்று உயர் அதிகாரியிடம் பேசும்பொழுது பணிவுடன் நடந்து கொள்ளுங்கள். கணவன் மனைவிக்கு இடையே சுமூக உறவு இருக்கும். பிள்ளைகளுக்கு தேவையான ஆடை அணிகலன்கள் வாங்கிக் கொடுப்பீர்கள். கருத்து வேற்றுமையால் பிரிந்து சென்றவர்கள் மனம் மாறி மீண்டும் திரும்பி வருவார்கள். பணவரவு ஓரளவு திருப்தியை கொடுக்கும். காரியத்தில் அனுகூலமும் இருக்கும். தொழில் வியாபாரம் தொடர்பான அலைச்சல்கள் அதிகரிக்கும். வெளியூர் பயணத்தில் கவனம் இருக்கட்டும்.
வாடிக்கையாளரிடம் பேசும்போது நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. இன்று மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றத்தை அடைய கடுமையாக தான் உழைக்க வேண்டியிருக்கும் பார்த்துக்கொள்ளுங்கள். ஆசிரியரிடம் ஏதேனும் சந்தேகம் இருப்பின் தைரியமாக கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும்போதோ முக்கியமான காரியத்திற்கு செல்லும்போதோ கரு நீல நிறத்தில் ஆடை அல்லது கரு நீலத்தில் கைக்குட்டையை எடுத்து செல்லுங்கள். அனைத்துக் காரியமும் சிறப்பாக இருக்கும். அதுபோலவே காலையில் எழுந்ததும் காக்கைக்கு அன்னமிட்டு இன்றைய நாளை தொடங்குங்கள். அனைத்து விஷயங்களும் சிறப்பாக இருக்கும். உங்களுடைய கர்ம தோஷங்களும் படிப்படியாக குறையும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 4 மற்றும் 6
அதிர்ஷ்ட நிறம் : கரு நீலம் மற்றும் மஞ்சள் நிறம்