Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மிதுன இராசிக்கு… “எந்த ஒரு விஷயத்திலும் கவனம்”… அவசரம், படபடப்பு வேண்டாம்..!!

மிதுனம் ராசி அன்பர்களே..!! உங்கள் உடல் நலத்தில் கவனம் கொள்ள வேண்டும். இன்று தொழில் வியாபாரத்தில் திட்டமிட்ட இலக்கு நிறைவேற கால அவகாசம் தேவைப்படும். சிறு அளவில் தான் பணம் வந்து சேரும். பணம் கடன் வாங்குவதற்கான சூழல் இருக்கும். புத்திரரின் அறிவுபூர்வமான செயல் மனதை மகிழ்விக்கும். இன்று மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் காண்பார்கள். விளையாட்டுப் போட்டியில் வெற்றி காண்பார்கள். எந்த ஒரு விஷயத்திலும் கவனம் மட்டும் இருக்கட்டும் பார்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் செய்யக்கூடிய காரியத்தில் தடை தாமதம் போன்றவை இருக்கும். பொறுமை என்பது இன்று முக்கியமான நாளாக படுகின்றது. முடிந்தால் ஆலயம் செல்லுங்கள் மன மகிழ்வாக இருக்கும். அதுபோலவே எந்த காரியத்தையும் செய்யும் பொழுது அவசரம் வேண்டாம். படபடப்பும் வேண்டாம். உங்களுடைய மூச்சை ஆசுவாசப்படுத்திக்கொண்டு செய்யுங்கள் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

உறவினர் வகையில் உதவிகள் இருக்கும். தெய்வீக நம்பிக்கை இன்று கூடும். மற்றவருக்கு உதவி செய்யும் பொழுது கவனம் இருக்கட்டும். அந்த விஷயத்தில் நீங்கள் ரொம்ப முக்கியமாக கவனமாக செயல்படுங்கள். தெரியாத நபரிடம் பேச்சுவார்த்தையை குறைத்துக்கொள்வது நல்லது. இன்று எந்த காரியம் செய்வதாக இருந்தாலும் எச்சரிக்கையாகவே செய்யுங்கள். அது போதும். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் போது, முக்கியமான காரியத்திற்கு செல்லும் பொழுது பச்சை நிற ஆடை அல்லது பச்சை நிறத்தில் கைக்குட்டையை எடுத்துச் செல்லுங்கள். அனைத்து காரியங்களும் சிறப்பாக நடக்கும். அது மட்டும் இல்லை இன்று செவ்வாய் கிழமை என்பதால் முருக பெருமானை மனதார நினைத்து வழிபட்டு இன்றைய நாளை தொடங்குங்கள் சிறப்பாக இருக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 3 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் பச்சை நிறம்

Categories

Tech |