மிதுனம் ராசி அன்பர்களே..!! இன்று எதிர்பாராதவிதமாக பண வரவு வரும். அதனால் உங்கள் மனம் பரவசப்படும். புதிய ஆடை, ஆபரணங்கள், அலங்காரப் பொருட்கள் சேரும். அரசாங்க உதவிகள் தடையின்றி கிடைக்கும். இன்று கணவன் மனைவிக்கிடையே அன்பு இருக்கும். பிள்ளைகளும் இன்று உங்களுக்கு பெருமை சேர்ப்பார்கள். விருந்து கேளிக்கை நிகழ்ச்சிகளில் குடும்பத்தினருடன் கலந்து கொள்வீர்கள். எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடித்து பாராட்டுகளையும் பெறுவீர்கள். இன்று பணவரவும் நல்லபடியாக வந்து சேரும். அதனால் சேமிக்கக்கூடிய எண்ணத்தை மட்டும் வளர்த்துக் கொள்ளுங்கள். தொழில் வியாபாரம் நல்லபடியாக நடக்கும். தொழிலை அபிவிருத்தி செய்வதற்காக மற்றவரிடம் பண உதவி கேட்கலாம். இன்று நீங்கள் நினைத்தது ஓரளவு நடக்கும். தெய்வீக நம்பிக்கை கூடும். தெய்வத்திற்காக சிறு தொகையையும் நீங்கள் செலவிட நேரிடும்.
இன்று உடல் ஆரோக்கியத்தை பொருத்தவரையில் சிறப்பாக இருக்கும். கொடுக்கல் வாங்கலும் ஒழுங்காக இருக்கும். எப்பொழுதுமே நீங்கள் புரிந்து கொள்வது ஒன்றே ஒன்று, யாருக்குமே எந்தவிதமான ஜாமீன் கையெழுத்து போடாதீர்கள். அந்த விஷயத்தில் மட்டும் கொஞ்சம் கவனமாக இருங்கள். வாகனத்தில் செல்லும் போது கொஞ்சம் பொறுமையாக செல்லுங்கள். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும்போதோ, முக்கியமான காரியத்திற்கு செல்லும் போதோ வெள்ளை நிற ஆடையை அணிந்து கொண்டு செல்லுங்கள். இல்லையேல் வெள்ளை நிறத்தில் கைக்குட்டை எடுத்துச் செல்லுங்கள். இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் சூரிய பகவான் வழிபாடும், விநாயகர் வழிபாடும் உங்களுக்கு சிறப்பை கொடுப்பதாக இருக்கும். நல்ல வெற்றியையும் கொடுக்கும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5 மற்றும் 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் பச்சை நிறம்