Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மிதுன இராசிக்கு… “மாறுபட்ட சூழல் உருவாகும்”… கவனமாக நடந்து கொள்ளுங்கள்..!!

மிதுனம் ராசி அன்பர்களே..!! உங்கள் இறக்க குணத்தினால் மாறுபட்ட சூழல் உருவாக கூடும். இன்று தொழில் வியாபாரத்தில் இடையூறுகளை தாமதமின்றி சரி செய்வது சிறப்பு. குறைந்த அளவில்தான் பண வரவு இருக்கும். உடல் நலத்திற்கு மருத்துவ சிகிச்சைகள் தேவைப்படலாம். இன்று சரியான நேரத்தில் உறங்க முடியாத சூழ்நிலையும் ஏற்படும். மிகவும் வேண்டியவர் பிரிய வேண்டியிருக்கும் பார்த்துக்கொள்ளுங்கள். கவனமாக நடந்து கொள்ளுங்கள். மற்றவர்களுக்கு வழியே சென்று உதவுவதால் வீண் விரோதம் ஏற்படும்.

எதிலும் வெற்றி கிடைப்பதற்கு கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். நண்பரின் உதவிகள் உங்களுக்கு முழுமையாக கிடைக்கும். வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்வது எப்பொழுதுமே புத்திசாலித்தனம். நல்ல வாய்ப்புகளை தேர்ந்தெடுத்து பயன்படுத்திக்கொள்ளுங்கள். எதிர்காலத்திற்கு உதவும் வகையில் உங்களது சிந்தனையும் செயலும் இருக்கும். கலைத்துறையை  சார்ந்தவர்களுக்கு வாய்ப்புகள் இல்லம் தேடி வரக்கூடும்.

நல்ல முன்னேற்றமான சூழ்நிலையை இன்று அடையக்கூடும். இன்று நீங்கள் வெளியில் செல்லும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அல்லது கைக்குட்டையை எடுத்து செல்லுங்கள். பச்சை நிறம் உங்களுக்கு சிறப்பான நிறமாக உள்ளது. அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று விநாயகர் வழிபாட்டை மேற்கொண்டு இன்றைய நாளை தொடங்குங்கள். அனைத்துக் காரியமும் நல்லபடியாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 2 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம் : பச்சை மற்றும் வெள்ளை நிறம்

Categories

Tech |