Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மிதுன இராசிக்கு… “பொருளாதார நிலை இன்று உயரும்”… சாதிக்க முயற்சிப்பீர்கள்..!!

மிதுனம் ராசி அன்பர்களே..!! இன்று தொழில் வளர்ச்சி மேலோங்கும் நாளாக இருக்கும். புதிய ஒப்பந்தங்கள் வர தொலைபேசி வழித் தகவல் உறுதுணையாக அமையும். முக்கிய புள்ளியின் அறிமுகத்தால் பொருளாதார நிலை இன்று உயரும். இன்று ஆழ்ந்த யோசனையும்  அனுபவ அறிவையும் கொண்டு எதையும் சாதிக்க முயற்சிப்பீர்கள். உடல் ஆரோக்கியத்தில் மட்டும் கவனம் இருக்கட்டும். எதிர்பாலினத்தவரிடம் பழகும் போது மிகவும் எச்சரிக்கையாக இருங்கள்.

எந்த காரியத்தை செய்தாலும் அதில் வேகத்தை காட்டாமல் மெத்தனமாகவே செய்யத் தோன்றும். அரசாங்க வேலைகளும் அனுகூலமாகவே இருக்கும். சகோதரர்களிடையே இருந்துவந்த பிரச்சினைகள் அகலும். இன்று மனப் பிரச்சினைகள் தீர்ந்து தெளிவு ஏற்படும். நீங்கள் செய்யக்கூடிய காரியங்களும் வெற்றியை கொடுக்கும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல ஆர்வம் ஏற்படும்.

ஆசிரியர்களிடம் முழு ஒத்துழைப்பு கிடைக்கும். சக மாணவரிடம் மட்டும் கொஞ்சம் கவனமாக நடந்து கொள்ளுங்கள். இன்று நீங்கள் வெளியில் செல்லும்பொழுது நீல நிறத்தில் ஆடை அணிந்து செல்லுங்கள். நீலநிறம் இன்று சிறப்பாக இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று ஐப்பசி பௌர்ணமி என்பதால் ஏதேனும் ஒரு சிவன் கோவிலுக்கு சென்று அன்ன  அபிஷேகத்தை கண்டு களியுங்கள். உங்கள் வாழ்க்கையில் வற்றாத செல்வத்தை ஏற்படுத்திக்கொடுக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : தெற்கு

அதிர்ஷ்ட எண் : 2 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு மற்றும் நீல நிறம்

Categories

Tech |