மிதுனம் ராசி அன்பர்களே..!! உங்கள் பேச்சில் அன்பும் பண்பும் மிகுந்திருக்கும். விலகிய உறவினர் சொந்தம் பாராட்டக் கூடும். தொழில் வியாபாரம் செழிக்க முழு முயற்சியுடன் பணிபுரிவீர்கள். சராசரி பணவரவுடன் நிலுவைப்பணம் வசூலாகும். பெண்களுக்கு பொன் பொருள் சேரும். தேவையற்ற மனக் கவலை உண்டாகும். வழக்கு விவகாரங்களில் தாமதமான போக்கு காணப்படும். நிர்ப்பந்தமாக வெளியூர் பயணம் செல்ல வேண்டியிருக்கும்.
பயணம் செல்லும்போது மட்டும் கொஞ்சம் கவனம் இருக்கட்டும். குடும்பத்தில் பிரச்சனை தலை தூக்கி பின்னர் சரியாகும். கணவன் மனைவிக்கு இடையே ஒற்றுமை இருக்கும். பிள்ளைகளால் செலவு கொஞ்சம் ஏற்படும். உறவினர்களிடம் அனுசரித்து செல்லுங்கள். கூடுமானவரை பேச்சில் கவனம் இருக்கட்டும்.
இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். மஞ்சள் நிறம் உங்களுக்கு உகந்த நிறமாக இருக்கும். அது மட்டுமில்லை இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் சூரிய பகவான் வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். சூரிய பகவான் வழிபாடு உங்களுக்கு அனைத்து விதமான நன்மைகளை கொடுக்கும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5 மற்றும் 6
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் வெள்ளை நிறம்