Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மிதுன இராசிக்கு… “பண நெருக்கடி குறையும்”… எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.!!

அயராது உழைத்துக் கொண்டிருக்கும் மிதுனம் ராசி அன்பர்களே..!! இன்று போக்குவரத்தில் கொஞ்சம் கவனம் இருக்கட்டும். குழந்தைகளுக்கு மருத்துவ கவனிப்பு தேவைப்படும். நீங்கள் எவ்வளவுதான் திறமையாக செயல் பட்டாலும் உங்களுடைய திறமைகள் பாராட்டுக்களை பெறாது. இன்று மற்றவருடன் பகை ஏற்படக்கூடும் பார்த்துக்கொள்ளுங்கள். முடங்கிக் கிடந்த காரியங்கள் அனைத்தும் வேகம் பிடிக்கும். நெருக்கடியான நேரத்தில் உறவினர்கள்  நண்பர்கள் உங்களுக்கு கைகொடுப்பார்கள். மனதில் இருந்து வந்த சஞ்சல மனநிலையில்  மாற்றம் இருக்கும். பண நெருக்கடி ஓரளவு குறையும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். அரசாங்கம் மூலம் லாபம் ஏற்படும். வெளியூர் அல்லது வெளிநாடு பயணம் சாதகமான பலனை கொடுக்கும். வெளியூரிலிருந்து நல்ல தகவல் வந்து சேரும். ஏற்றுமதித் துறையில் உள்ளவர்களுக்கு நல்ல முன்னேற்றகரமான நாளாக இன்று இருக்கும்.

இன்று குடும்பத்தில் கலகலப்பான சூழல் இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். முடிந்தால் ஆசிரியரின் சொல்படி நடந்து கொள்வது மிகவும் சிறப்பாக இருக்கும். இன்றும் நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும்போது முக்கியமான காரியங்களை செய்யும் பொழுது பச்சை நிற ஆடை அல்லது பச்சை நிறத்தில் கைக்குட்டையை  எடுத்துச் செல்லுங்கள். அனைத்தும் சிறப்பாக இருக்கும். அதுபோலவே காலையில் எழுந்ததும் விநாயகர் வழிபாட்டை மேற்கொண்டால் இன்று அனைத்துக் காரியமும் சிறப்பாக இருக்கும். நீங்களும் மகிழ்ச்சியாகவே காணப்படுவீர்கள்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : தெற்கு

அதிஷ்ட எண் : 2 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் பச்சை நிறம்

Categories

Tech |