Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மிதுன இராசிக்கு… “வெற்றிக்கனியை எட்டிப் பிடிக்கும் நாள்”.. மனக்குழப்பம் நீங்கும்..!!

மிதுனம் ராசி அன்பர்களே..!! இன்று வெற்றிக்கனியை எட்டிப் பிடிக்கும் நாளாக இருக்கும். வெளியூர் பயணங்களால் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். வருங்கால நலன்கருதி முக்கிய புள்ளிகளை சந்திக்கக்கூடும். புதிய வாகனம் வாங்க கூடிய முயற்சி கைகூடும். இன்று எடுத்த காரியத்தை சாதகமாகவே செய்து முடிப்பீர்கள் .திடீர் மன தடுமாற்றம் ஏற்படலாம் பார்த்துக் கொள்ளுங்கள். பெரியோர் ஆலோசனை உங்களுக்கு கைகொடுக்கும்.

மாணவர்களுக்கு கல்வி பற்றிய கவலையை அதிகரிக்கும். கவனமாக பாடங்களைப் படியுங்கள் அது போதும். காரியத்தில் அனுகூலம் இன்று ஏற்படும். மனக்குழப்பம் நீங்கி தெளிவு இன்று உண்டாகும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த முன்னேற்றமும் கிடைக்கும். பழைய பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்பட்டாலும் வந்து சேர்வதில் எந்த தடையும் இருக்காது.

இன்றையநாள் ஓரளவு சிறப்புமிக்க நாளாகவே இருக்கும். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். பச்சை நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தை கொடுக்க கூடியதாக இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சித்தர்கள் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள். அனைத்துக் காரியமும் சிறப்பாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : தெற்கு

அதிஷ்ட எண் : 2 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம் : பச்சை மற்றும் ஊதா நிறம்

Categories

Tech |