மிதுனம் ராசி அன்பர்களே..!! அடுத்தவர் மீதான நம்பிக்கை இன்று குறையக்கூடும். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி பெற கூடுதலாகவே பணிபுரிவீர்கள். எதிர்பார்த்த வருமானம் இருக்கும். பிள்ளைகளை கண்டிப்பதில் இதமான அணுகுமுறை வேண்டும். ஆரோக்கியம் சீராக இருக்கும். தொழில் வியாபாரம் நல்லபடியாக இருக்கும். பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும். நண்பர்களை அனுசரித்துச் செல்லுங்கள். இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களுடன் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது.
அலைச்சல் இருக்கும் பார்த்துக்கொள்ளுங்கள். குடும்பத்தில் இருப்பவர்களுடன் அவ்வப்போது வாக்குவாதங்கள் ஏற்பட கூடும். கணவன் மனைவிக்கிடையே சின்ன சின்ன கருத்து வேறுபாடுகள் வரக்கூடும் பொறுமையாகவும் நிதானமாகவும் செயல்படுங்கள். இன்று மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றமான சூழல் இருக்கும். இருந்தாலும் சக மாணவருடன் கொஞ்சம் பழகும் பொழுது கவனமாக இருங்கள்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் செய்யும் பொழுது வெள்ளை நிறத்தில் செய்யுங்கள். வெள்ளை நிற ஆடை உங்களுக்கு சிறப்பாக இருக்கும். அதிஷ்டத்தை கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று வெள்ளிக்கிழமை என்பதால் ஏழு நபர்களுக்கு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுங்கள். உங்களுடைய கர்ம தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வச் செழிப்பை ஏற்படுத்திக்கொடுக்கும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2 மற்றும் 3
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் நீல நிறம்