மிதுனம் ராசி அன்பர்களே..!! இன்று சங்கடமான சூழ்நிலையும் நீங்கள் எளிதாக சமாளிப்பீர்கள். பொறுமையுடன் செயல்படுவது எதிர்காலத்தில் நன்மை பெற உதவும். தொழில் வளர்ச்சி பெறுவதற்கு கூடுதலாகவே பணிபுரிவீர்கள். பணச் செலவில் சிக்கனத்தைக் கடைபிடிப்பீர்கள். இன்று தியானம் தெய்வ வழிபாடு மனதிற்கு அமைதியை கொடுக்கும். இன்று வீட்டை விட்டு வெளியில் தங்கக் கூடிய சூழல் இருக்கும். உழைப்பு அதிகமாக இருக்கும். கலைப்பு பித்த நோய் போன்றவை ஏற்படக்கூடும். கூடுமானவரை உடலை கவனமாக கவனித்துக் கொள்ளுங்கள்.
இன்று வீண் கவலை மனதில் இருக்கும். மற்றவர்களின் விவகாரங்களில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். இன்று செய்யக்கூடிய காரியங்கள் ஓரளவு நேர்த்தியாக இருக்கும். அரசியல் துறையினருக்கு சந்தோசமான நிலை காணப்படும் மேலிடத்தில் இருந்து வந்த கருத்து வேற்றுமை நீங்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். இன்று மாணவக் கண்மணிகளுக்கு கல்வியில் இருந்த தடைகள் விலகி செல்லும்.
சிறப்பாக செயல்படுவார்கள். நல்ல முன்னேற்றமான சூழ்நிலையும் அடையக்கூடும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்க கூடியதாக இருக்கும் அதுமட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள். அனைத்துக் காரியமும் நல்லபடியாகவே நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1 மற்றும் 6
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு மற்றும் மஞ்சள் நிறம்