Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மிதுன ராசிக்கு…”எதையும் ஒரு முறைக்கு பலமுறை யோசித்து செய்வது நல்லது”…நல்ல செய்தி இல்லம் தேடிவரும்…!!!

மிதுன ராசி அன்பர்களே….!!  இன்று உங்கள் ஆசைகள் நிறைவேற ஆலய வழிபாட்டை மேற்கொள்ள வேண்டிய நாளாக இருக்கும். எதையும் ஒரு முறைக்கு பலமுறை யோசித்து செய்வது நல்லது. சில காரியங்களில் வெற்றி கிடைக்கும். திருமணத்திற்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தி இல்லம் தேடி வரக்கூடும்.

காதல் கைகூடும் நாளாக இன்று இருக்கும். வாழ்க்கைத்துணையுடன் நீங்கள் மகிழ்ச்சியாக இன்று காலம் கழிப்பீர்கள். கூட்டாளிகளை அனுசரித்து செல்வது தொழிலுக்கு நல்லது.இன்று குடும்பத்தில் உறவினர் வருகை இருக்கும். தேவையற்ற வீண் பேச்சுக்களை குறைப்பதன் மூலம் குடும்பத்தில் அமைதி ஏற்படும். இன்று வாழ்க்கைத்துணையின் ஆதரவுடன் சில முக்கியப் பணியையும் நீங்கள் நிறைவேற்றுவீர்கள்.பிள்ளைகளுக்காக செலவு செய்ய நேரிடலாம். குடும்ப விவாதத்தில் கோபத்தை மட்டும் தவிர்த்து விட்டு பேசுங்கள் அது போதும்.

இன்று மாணவர்களுக்கு கல்வியில் நாட்டம் செல்லும். கல்வியில் இருந்த தடைகள் விலகி செல்லும். நல்ல முன்னேற்றமான சூழல் இருக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். பச்சை நிறம் இன்று உங்களுக்கு சிறப்புவாய்ந்த நிறமாக அமையும். அதுமட்டுமில்லாமல் இன்று சித்தர்கள் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள். அனைத்துக் காரியமும் சிறப்பாகவே நடக்கும்.

இன்று உங்களுக்கு அதிர்ஷ்டமான திசை: கிழக்கு

அதிர்ஷ்ட எண் : 4 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம் :நீலம் மற்றும் பச்சை நிறம்

Categories

Tech |