Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மிதுன ராசிக்கு…”பணவரவு திருப்திகரமாக இருக்கும்”.. பேசும்பொழுது நிதானத்தை பின்பற்றுவது நல்லது..!!

மிதுன ராசி அன்பர்களே..!!!  இன்று அறிமுகம் இல்லாதவரிடம் அதிகமாக பேச வேண்டாம். எதிர்பார்த்த நல்ல தகவல்கள் கிடைப்பதில் தாமதம் இருக்கும். தொழில் வியாபாரம் செழிக்க கூடுதல் உழைப்பு தேவைப்படும். பணப்பரிவர்த்தனையில் பாதுகாப்பு பின்பற்ற வேண்டும். இன்று வெளிவட்டார தொடர்புகளில் கவனம் இருக்கட்டும். ஆனாலும் பணவரவு திருப்திகரமாக இருக்கும். அரசியல் துறையினை சார்ந்தவர்களுக்கு அலைச்சல்களும் அதிகரிக்கும்.

உடன் இருப்பவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். அதுமட்டுமில்லாமல் கணவன்-மனைவிக்கிடையே பேசும்பொழுது நிதானத்தை பின்பற்றுவது நல்லது. மற்றவர்களிடம் பேசும் பொழுது கொஞ்சம் நிதானமாகவே இருந்தாள் இன்றைய நாள் ஓரளவு சிறப்பை கொடுக்கும். முடிந்தால் ஆலய வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். மனம் நிம்மதியாக காணப்படும். அதுமட்டுமில்லாமல் இன்று காதலில் வழிபடக் கூடிய சூழலும் இருக்கு. இன்று மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

இருந்தாலும் ஆசிரியர்கள் சொல்வதை கூர்ந்து கவனித்து பின்னர் அதனை செயல்படுத்துவது நல்லது. இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். சிவப்பு நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று வெள்ளிக்கிழமை என்பதால் ஏழு நபர்களுக்கு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுங்கள். உங்களுடைய வாழ்க்கையில் உள்ள கர்ம  தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வ செழிப்பை ஏற்படுத்தி கொடுக்கும்.

இன்று உங்களுக்கு அதிர்ஷ்டமான திசை: வடக்கு

அதிர்ஷ்ட எண் : 5 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு மற்றும் வெள்ளை நிறம்

Categories

Tech |