Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மிதுன இராசிக்கு… “பிள்ளைகள் மூலம் செலவுகள் இருக்கும்”… பயணங்கள் செல்ல நேரிடும்.!!

எதிரிகளை தவிடுபொடியாக்கும் மிதுன ராசி அன்பர்களே…!! இன்று உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த சலுகைகள் அனைத்தும் கிடைக்கும். தன்னம்பிக்கையோடு இன்று பணிபுரிவீர்கள். குடியிருக்கும் வீட்டில் ஏற்பட்ட பிரச்சினைகள் விலகி செல்லும். தேக ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக்கொள்வீர்கள். இன்று குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்பட்டாலும் மனதில் மட்டும் இருக்கம் இருக்கும். கணவன்- மனைவி இடையே நெருக்கம் இருக்கும். அதே நேரத்தில் சின்ன சின்ன வாக்குவாதம் ஏற்படும் பார்த்துக்கொள்ளுங்கள். பிள்ளைகள் மூலம் செலவுகள் இருக்கும். அவர்களது முயற்சிகளுக்கு உறுதுணையாக இருப்பீர்கள். பயணங்கள் செல்ல நேரிடும்.

உறவினர்களிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. இன்று கூடுமானவரை கொஞ்சம் பொறுமையாக செயல்படுங்கள். இன்று மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றத்தை பெறக்கூடும். ஆசிரியர்களின் சொல்படி நடந்து கொள்வீர்கள். இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும்போது முக்கிய இடத்திற்கு செல்லும் போது வெள்ளை நிற ஆடை அல்லது வெள்ளை நிறத்தில் கைக்குட்டையை எடுத்து சென்றால் சிறப்பாக இருக்கும். விநாயகரை வழிபட்டு இன்றைய நாளை தொடங்கினால் நீங்கள் செய்யக்கூடிய காரியங்கள் முன்னேற்றமான சூழலில் இருக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : மேற்கு

அதிஷ்ட எண் : 5 மற்றும் 8

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் பச்சை நிறம்

Categories

Tech |