Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மிதுன இராசிக்கு… “சுப செய்தி வந்து சேரும்”.. பொறுமையாக செயல்படுங்கள்..!!

மிதுனம் ராசி அன்பர்களே..!! இன்று புதிய விஷயங்களை அறிவதில் ஆர்வம் கொள்வீர்கள். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி பெற தேவையான மாற்றங்களைச் செய்வீர்கள். பணபரிவர்த்தனை திருப்திகரமாக இருக்கும். எதிர்பார்த்த சுப செய்தி வந்து சேரும். இன்று எதிலும் இழுபறியான நிலை இருக்கும். இருந்தாலும் சரியான நேரத்திற்கு உங்களுக்கு கை கொடுப்பதாய் சில காரியங்கள் நடக்கும். அடுத்தவர்களால் தொல்லைகள் உண்டாகலாம் பார்த்துக்கொள்ளுங்கள்.

கவனமாக இருங்கள், வாழ்க்கைத்துணையின் உடல்நலத்தில் கொஞ்சம் கவனம் இருக்கட்டும். குடும்பத்தில் இருப்பவர்களால் திடீர் திருப்பங்கள் ஏற்படும் கோபம் கொஞ்சம் தலைதூக்கும் கூடுமானவரை இன்று பொறுமையாக செயல்படுங்கள். பிள்ளைகளை அனுசரித்து செல்வது ரொம்ப நல்லது. அதேபோல யாரிடமும் எந்தவித வாக்குவாதங்களும் செய்யாமல் நடந்து கொள்ளுங்கள்.

இன்று மாணவர்களுக்கு கல்வியில் ஓரளவு தான் வெற்றி பெற முடியும். கொஞ்சம் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிந்து செல்லுங்கள் .பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டும் இல்லை இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாத்தை காக்கைக்கு அன்னமிட்டால் காரியங்கள் அனைத்துமே உங்களுக்கு நல்லபடியாக அமையும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 7 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம் : பச்சை மற்றும் நீல நிறம்

Categories

Tech |