Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மிதுன இராசிக்கு… “நிகழ்வுகளை உணர்ந்து செயல்படுவீர்கள்”… நண்பர்களிடம் பக்குவமாக பேசுங்கள்..!!

மிதுனம் ராசி அன்பர்களே..!! இன்று நிகழ்வுகளை உணர்ந்து செயல்படுவீர்கள். அவமதித்தவர் அன்பு பாராட்டுவர். தொழில் வியாபாரத்தில் நிலுவை பணியை நிறைவேற்றுவீர்கள். தாராள பணவரவு கிடைக்கும். பெண்கள் புத்தாடை ஆபரணம் பெற நல்ல யோகம் உண்டாகும். இன்று எடுத்துக் கொண்ட காரியங்களில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. நண்பர்களிடம் பக்குவமாக பேசுவது ரொம்ப நல்லது.

எடுத்த காரியத்திலும் சாதகமான பலன்கள் பெறுவதற்கு வாக்குவாதங்களை தவிர்ப்பது ரொம்ப நல்லது. இன்று பயணங்களின்போது கவனமாக இருங்கள். அதேபோல செயலை செய்யும் பொழுது ரொம்ப கவனமாக செய்யுங்கள். இன்று ஓரளவு சிறப்பாக நாளாகத் தான் இருக்கும். முடிந்தால் ஆலயம் சென்று வாருங்கள். மனம் அமைதியாக காணப்படும்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும்போது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தை கொடுக்கக்கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்து காரியமுமே சிறப்பாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : மேற்கு

அதிர்ஷ்ட எண் : 5 மற்றும் 6

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் சிவப்பு நிறம்

Categories

Tech |