மிதுனம் ராசி அன்பர்களே..!! இன்று சுதந்திரமாக நீங்கள் செயல்படுவீர்கள். புதிய சாதனையை நிகழ்த்த தேவையான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். தொழிலில் உற்பத்தி விற்பனை அளவு அதிகரிக்கும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். இன்று மாணவர்கள் நல்ல பெயரும் பரிசும் பெறக்கூடும். நோய் நீங்கி உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
பணவரவு எதிர்பார்த்தது போல் இருக்கும். புதிய நபர்களின் நட்பு கிடைக்கும். பாதியில் நின்ற காரியங்கள் சிறப்பாக நடக்கும். வழக்குகளில் திடீர் குழப்பம் மட்டும் கொஞ்சம் ஏற்படலாம். அதுமட்டுமில்லாமல் தீ எந்திரம் ஆகியவற்றைக் கையாளும் பொழுது ரொம்ப கவனமாக கையாளுங்கள்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தை கொடுக்கக்கூடிய அளவில் இருக்கும். அதுபோலவே இன்று வியாழக்கிழமை என்பதால் சித்தர்கள் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்து காரியமுமே நல்லபடியாகவே நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3 மற்றும் 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்