மிதுனம் ராசி அன்பர்களே..!! இன்று உறவினர்களிடம் அதிக அன்பு பாசம் கொள்வீர்கள். தொழில் வியாபாரம் செழிக்க தேவையான அளவில் பணிபுரிவீர்கள். உபரி வருமானம் கிடைக்கும். குடும்பத்தேவை தாராள பணச் செலவில் நிறைவேறும். இன்று எதில் கையெழுத்து போடுவதாக இருந்தாலும் கவனமாக இருங்கள். எழுத்து வகையில் கொஞ்சம் சிக்காமல் இருப்பது ரொம்ப நல்லது.
கூட்டுத் தொழில் வியாபாரத்தில் இருப்பவர்கள் நண்பருடன் சுமுகமான முறையில் அனுசரித்து செல்வது நல்லது. வீண் அலைச்சல் கொஞ்சம் உண்டாகலாம் பார்த்துக்கொள்ளுங்கள். கூடுமானவரை நிதானத்தை மேற்கொள்ளுங்கள். இன்றைய நாள் உங்களுக்கு சிறப்பாக தான் இருக்கும். உடல் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை ரொம்ப நல்லாகவே இருக்கும். ஓய்வான சூழ்நிலையும் இன்று காணப்படும்.
வெளியூர் பயணம் உங்களுக்கு புதிய அனுபவத்தை கொடுக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். நீலநிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சூரிய பகவான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்து காரியமுமே ரொம்ப சிறப்பாக நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3 மற்றும் 6
அதிர்ஷ்ட நிறம் : நீலம் மற்றும் சிவப்பு நிறம்