மிதுனம் ராசி அன்பர்களே..!! இன்று பயணம் பலன் தரும் விதத்தில் அமையும் நாளாக இருக்கும். பக்கபலமாக இருக்கும் நண்பர்கள் உங்கள் பணத்தேவையை பூர்த்தி செய்வார்கள். சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். நூதனப் பொருள் சேர்க்கை உண்டாகும். இன்று மாணவமணிகள் தீவிர முயற்சி எடுத்து படிப்பது அவசியம். உடல்நலனை பொறுத்தவரை வயிறு உபாதைகள் வந்து மறையும். எந்த காரியத்திலும் எந்தசூழ்நிலையிலும் நீதியை நிலைநாட்டு வீர்கள்.
பிள்ளைகளால் இருந்து வந்த தொந்தரவுகள் நீங்கி நல்லவைகள் நடக்க ஆரம்பிக்கும். இறை அருளும் தெய்வீக நம்பிக்கையும் கூடும். இன்று மனதில் நீங்கள் நினைத்தது நடக்கும் நாளாக இருக்கும். கணவன் மனைவிக்கிடையே அன்பு இருக்கும். செய் தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். அது மட்டுமில்லாமல் கொடுக்கல் வாங்கல் விஷயங்கள் ரொம்ப சிறப்பை கொடுப்பதாகவே அமையும். உங்களுடைய உடலில் வசீகரத் தன்மை கூடும்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும்போது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்ககூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சிவபெருமான் வழிபாட்டையும், 7 நபர்களுக்கு தயிர் சாதத்தை அன்ன தானமாகவும் கொடுங்கள். உங்கள் வாழ்க்கையில் உள்ள கர்மதோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வச் செழிப்புடன் இருக்கலாம்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : மேற்கு
அதிஷ்ட எண் : 2 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மற்றும் வெள்ளை நிறம்