Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மிதுன ராசிக்கு… “மன தைரியம் கூடும் நாள்”… லாபம் கிடைக்கும் ….

மிதுனம் ராசி அன்பர்களே …!!இன்று செயலில் மதி நுட்பதிறன்  அதிகரிக்கும். தொழில் வியாபாரம் தொடர்பு பலம்பெறும். கூடுதல் பணம் வருமானம் கிடைக்கும். வெகுநாள் வாங்க நினைத்த பொருட்களை வாங்க கூடும். இன்று  அனைத்து விஷயத்திலும் அணுகுலம் ஏற்படும். எதிர்பாராத வகையில் உதவிகள் கிடைக்கும். பயணங்கள்கொஞ்சம் அலைச்சலை கொடுக்கும்.   மனதில் ஒருவித கவலை இருந்து கொண்டே தான் இருக்கும். எதை  பத்தியும்  கவலை வேண்டாம். மகிழ்ச்சியாகவே இருங்கள். இறை  வழிபாட்டை மேற்கொள்ளுங்கள்  சிறப்பாக இருக்கும். முயற்சிகள் ஓரளவு வெற்றியை கொடுக்கும்.

சிறப்பான முறையில் முன்னேற்றம் காணப்படுவீர்கள் .பயணங்களால் கொஞ்சம் அலைச்சல் ஏற்பட்டாலும் லாபத்திற்கு குறைவிருக்காது. அதனால் கவலை வேண்டாம்,  மன  தைரியம் பிறக்கும் வாக்கு வன்மையால் ஆதாயத்தை பெறுவீர்கள் .சிலருக்கு இடமாற்றம் போன்றவை ஏற்படக்கூடும் குடும்பத்தில்  திடீர் கருத்து வேற்றுமை கொஞ்சம்  ஏற்படும் அதை நீங்கள் கொஞ்சம் கவனமாகவே பார்த்துக்கொள்ளுங்கள். என்று ஆதாயம் ஓரளவு சிறப்பாக இருக்கும் .வெளிஊர் பயணத்தின்போது செலவு கொஞ்சம் அதிகரிக்கும்.

தேவையில்லாத பொருட்களை மட்டும் தயவு செய்து வாங்க வேண்டாம் .இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள் வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும் .அது மட்டுமில்லாமல் இன்று லட்சுமி வழிபாட்டையும் ஏழு நபர்களுக்கு தயிர் சாதத்தையும் அன்ன தானமாக கொடுங்கள். உங்கள் வாழ்க்கையில் உள்ள கர்ப்ப  தோஷங்கள் அனைத்தும் நீங்கி செல்வச் செழிப்பை ஏற்படுத்திக் கொடுக்கும்.

 இன்று உங்களுக்கு அதிர்ஷ்டமான திசை: கிழக்கு

அதிரஷ்ட நிறம் : ஆரஞ்சு மற்றும் வெள்ளை

அதிர்ஷ்ட  எண்   :5

 

நட்சத்திர பலன்கள் :

மிருகசீரிஷம் :இன்று மனம் கொஞ்சம் குழப்பமான சூழலில் இருக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும் .என்று பயணங்களால் லாபம் உண்டாகும் .

திருவாதிரை :இன்று  தடைகளை தாண்டி முன்னேறி செல்விர்கள்.   வெளியூர் பயணம் சிறப்பை  கொடுப்பதாக இருக்கும் .ஆதாயம் நல்லபடியாக வந்துசேரும் ,மனம் மகிழ்ச்சியாக இருக்கும்

புனர்பூசம் :எதிர்பாராத உதவிகள் சந்திக்கக்கூடும் .உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.பணம் வரவு தாராளமாகவே இருக்கும். திருமணத்திற்காக  காத்துக் கொண்டிருந்தவர்களுக்கு  நல்ல செய்தி வந்து சேரும்.

Categories

Tech |