மற்றவர்களின் மனதை தெளிவாக புரிந்து கொண்டு அதற்கு ஏற்றார் போல் நடந்து கொள்ளும் மிதுன ராசி அன்பர்களே..!! இன்று சொந்த நலனில் அக்கறை கொள்வீர்கள். அவப்பெயர் வராமல் செயல்பட வேண்டும். தொழில் வியாபாரத்தில் கூடுதல் பணிச்சுமை இருக்கும் பார்த்துக் கொள்ளுங்கள். அளவான பண வரவு இன்றைக்கு கிடைக்கும். ஒவ்வாத வாசனைப் பொருட்களை தயவு செய்து பயன்படுத்த வேண்டாம். இன்று சோம்பேறித்தனத்தை விட்டுவிட்டு நன்கு உழைப்பது வெற்றிக்கு வழி வகுக்கும். உங்களுடைய அறிவுத்திறன் இன்று அதிகரிக்கும். உங்களது பேச்சு மற்றவரை மயக்குவது போலிருக்கும். ருசியான உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். சாமர்த்தியமாக காரியங்களை செய்து வெற்றி பெறுவீர்கள். தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் வருவாய் உண்டாகும்.
சோதனைகள் அனைத்தும் வெற்றியாகவே மாறும். இன்று அரசியலில் உள்ளவர்களுக்கு பணப்புழக்கம் அதிகரிக்கும். எடுத்த காரியம் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். இன்று மாணவர்கள் கல்வியில் சிறப்பான முன்னேற்றத்தை அடைய கூடும் இருந்தாலும் படித்த பாடத்தை மட்டும் ஒரு முறைக்கு இரு முறை எழுதிப் பார்ப்பது சிறப்பை கொடுக்கும். இன்று நீங்கள் வெளியிடங்களுக்கு செல்லும் போது முக்கியமான பணியை மேற்கொள்ளும் போது சிவப்பு நிற ஆடை அல்லது சிவப்பு நிறத்தில் கைக்குட்டையோ எடுத்துச் செல்லுங்கள். அனைத்துக் காரியமும் சிறப்பாகவே இருக்கும். அதுபோலவே காலையில் எழுந்ததும் விநாயகரை மனதார வழிபட்டு வணங்குவது இன்றைய நாளுக்கான சிறப்பை கொடுக்கும். காரியத்தில் வெற்றி வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுக்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு மற்றும் மஞ்சள் நிறம்