Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மிதுன இராசிக்கு… “பெயரும் புகழும் அதிகரிக்கும்”…. செயல் திறனும் கூடும்.!!

மற்றவர்களை எளிதில் வசீகரிக்க  கூடிய மிதுனராசி அன்பர்களே.!! இன்று தன வரவுகூடும் நாளாக இருக்கும். நோய் நீங்கி ஆரோக்கியம் பெருகும். எல்லாவகையிலும் நல்லதே நடக்கும். வியாபாரிகளுக்கு தொழிலில் அபிவிருத்தி ஏற்படும். பெயரும் புகழும் அதிகரிக்கும். இன்று நீங்கள் எண்ணியதை  செய்து முடிக்க முடியாமல் தடங்களை கொஞ்சம் சந்திக்கக்கூடும் பார்த்துக்கொள்ளுங்கள். பணவரவு நன்றாக இருக்கும் தொழில் வியாபாரத்தில் சிக்கல்கள் தீர்வதற்கு பாடுபடுவீர்கள். ஆர்டர்கள்  பிடிப்பதற்கு அதிகமாக அலைய வேண்டியிருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அதிகம் உழைக்க வேண்டி இருக்கும். செயல் திறனும் கூடும். குடும்பத்தில் இருப்பவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. கணவன் மனைவிக்கு இடையே இடைவெளி குறைய மனம்விட்டுப் பேசுவது நல்லது.

பிள்ளைகள் எதிர்கால நலனுக்காக இன்று நீங்கள் பாடுபட வேண்டியிருக்கும். உத்தியோகத்தில் உழைப்பு அதிகமாக இருக்கும். குடும்பத்தில் ஓரளவு மகிழ்ச்சி இருக்கும். கலகலப்பும் காணப்படும். இன்று மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் அடைவதற்கு கொஞ்சம் கூடுதலாக உழைக்க வேண்டியிருக்கும். பாடங்களை நன்கு கவனமாக படிப்பது நல்லது. இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் போதோ முக்கியமான காரியத்திற்கு செல்லும் பொழுதோ பச்சை நிற ஆடை அல்லது பச்சை நிறத்தில் கைக்குட்டையோ எடுத்துச் செல்லுங்கள். அனைத்து காரியமும் சிறப்பாக இருக்கும். அதுபோலவே காலையில் எழுந்ததும் விநாயகர் வழிபாட்டை மேற்கொண்டு இன்றைய நாளை தொடங்கினால் அனைத்தும் நல்லபடியாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : தெற்கு

அதிஷ்ட எண் : 2 மற்றும் 3

அதிர்ஷ்ட நிறம் : பச்சை மற்றும் நீல நிறம்

Categories

Tech |