Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மிதுன இராசிக்கு… “எச்சரிக்கையுடன் இருங்கள்”… பண நெருக்கடி குறையும்..!!

மிதுனம் ராசி நேயர்களே :  இன்று வீட்டில் உள்ள பொருட்களை பத்திரமாக பார்த்துக் கொள்வது நல்லது. எந்த ஒரு சூழ்நிலையிலும் இன்று நீங்கள் எச்சரிக்கையுடன் இருங்கள். தாயின் உடல் நிலையில் கவனம் இருக்கட்டும். சிலருக்கு பணமுடை மற்றும் பண இழப்புகள் ஏற்படக்கூடும் பார்த்துக் கொள்ளுங்கள். தேவையில்லாத பொருட்களை நீங்கள் உடனடி செய்ய வேண்டாம். அதாவது தேவையில்லாத பொருட்களை வாங்க வேண்டாம். இன்று மற்றவருடன் சின்னதாக பகை ஏற்படக்கூடும். பேசும்போது பார்த்துப் பேசுங்கள். முடங்கிக் கிடந்த காரியங்கள் அனைத்தும் ஓரளவு வேகம் பிடிக்கும். நெருக்கடியான நேரத்தில் உறவினர்கள் நண்பர்கள் உங்களுக்கு கைகொடுப்பார்கள். மனதில் இருந்து வந்த சஞ்சலங்கள் தீர்ந்து மனநிலையில் மாற்றம் இருக்கும்.

பண நெருக்கடி குறையும். நீண்ட நீங்கள் எதிர்பார்த்து கொண்டிருந்த பணவரவு உங்களிடம் வந்து சேரும். ஆனால் அனைத்தும் கால தாமதத்துடன் வந்துசேரும். அரசாங்கம் மூலம் லாபம் ஏற்படும். வெளியூர் அல்லது வெளிநாடு பயணங்கள் சாதகமான பலனை கொடுக்கும். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். இன்று மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். இருந்தாலும் படித்த பாடத்தை ஒரு முறைக்கு இரு முறை எழுதிப் பார்ப்பது சிறப்பை கொடுக்கும். இன்றைய நாள்  நீங்கள் வெள்ளை நிற ஆடை அல்லது வெள்ளை நிற கைக்குட்டையை பயன்படுத்தினால் அனைத்தும் சிறப்பாக இருக்கும். வாய்ப்புகள் வந்து சேரும். அது போலவே நீங்கள் காலையில் எழுந்ததும் சூரிய நமஸ்காரம் செய்து இன்று நாளை தொடங்கினால் அனைத்து காரியங்களும் சிறப்பாக இருக்கும்.

இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை : கிழக்கு

அதிர்ஷ்டமான  எண் : 5 மற்றும் 6

அதிர்ஷ்டமான  நிறம் : பச்சை மற்றும் வெள்ளை நிறம்

Categories

Tech |