Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மிதுன இராசிக்கு… “பயணத்தால் ஆதாயம் கிடைக்கும்”… கௌரவம் அந்தஸ்து உயரும்..!!

மிதுனம் ராசி அன்பர்களே..!!  இன்று மன உறுதியுடன் நேர்மை வழியில் நடைபுரிவீர்கள். தொழில் வியாபாரத்தில் உருவாகிய குறையை சரி செய்வதால் உற்பத்தி விற்பனை சீராக இருக்கும். சராசரி அளவில் பண வரவு கிடைக்கும். தியானம் தெய்வ வழிபாடு மன அமைதியை கொடுக்கும். இன்று வளர்ச்சி கூடும் நாளாக இருக்கும். பயணத்தால் ஆதாயம் கிடைக்கும். குடும்பத்தில் பெரியவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. உத்தியோக மாற்ற சிந்தனை உருவாகும். ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது நல்லது. இன்று மற்றவர்களின்  நலனுக்காக வாதாடி வெற்றி பெறுவீர்கள். கௌரவம் அந்தஸ்து உயரும் .

தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் இருக்கும். பழைய பாக்கிகள் அனைத்தும் வசூலாகும். ஆர்டரில் வருவது திருப்திகரமாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இடமாற்றம் ஏற்பட கூடும் பார்த்துக்கொள்ளுங்கள். இன்றைய நாள் உங்களுக்கு சிறப்பான நாளாக இருக்கும். இன்று நீங்கள் முக்கியமான பணிகளை மேற்கொள்ளும்போது பச்சை நிற கைக்குட்டையை எடுத்து செல்வது சிறப்பு. அனைத்துக் காரியமும் நல்லபடியாகவே இருக்கும். அதே போல நீங்கள் காலையில் எழுந்ததும் சிவ பெருமானை மனதார நினைத்து இன்றைய  நாளை தொடங்கினால் அனைத்து காரியங்களும் சிறப்பாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : மேற்கு

அதிர்ஷ்டமான  எண்:  4 மற்றும் 5

அதிர்ஷ்டமான நிறம் : பச்சை மற்றும் சிவப்பு நிறம்

Categories

Tech |