அதிமுக பொதுக்குழு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், ஜூலை 11ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு செல்லாது என அதிரடியாக தீர்ப்பு வழங்கினார். அது மட்டுமல்லாமல் ஜூன் 23ஆம் தேதி முன்பிருந்த நிலையில்தான் இருக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் மட்டுமே பொதுக்குழுவை கூட்ட முடியும் என்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் தற்போது அந்த தீர்ப்பின் உடைய முழுமையான விவரம் என்பது வெளியாகி இருக்கிறது. அந்த தீர்ப்பில் நீதிபதி ஜெயச்சந்திரன் கூறிய கருத்துக்கள், சட்டத்தின் ஆட்சி என்பது அரசாங்கத்திற்கு மட்டுமல்ல, மாநிலத்தில் அரசை நடத்தக்கூடிய கட்சிகளுக்கும் பொருந்தும் என்று அவர் தெரிவித்திருக்கிறார். அந்த கட்சியினுடைய உறுப்பினரின் உரிமை பாதிக்கப்படுகிறது என்றால் அதில் தலையிட முடியாது என நீதிமன்ற மறுக்க முடியாது என்றும், சுட்டிக்காட்டி இருக்கிறார்.
அதுமட்டுமல்லாமல் கட்சி சட்ட விதிகளுக்கு முரணாக ஒரு கூட்டம் நடக்க கூட்டப்படுகிறது என்றால், அதில் கட்சி உறுப்பினரின் உரிமை பாதிக்கப்படுகிறது. இதில் நீதிமன்றம் தலையிட முடியாது என்பதை ஏற்க முடியாது என்றும், அந்த தீர்ப்பிலே அவர் சுட்டிக்காட்டிருக்கிறார். பொதுக்குழுவை ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் அனுமதி இல்லாமல் கூட்ட முடியாது என்றும், தற்காலிக அவை தலைவரால் பொதுக்குழுவை கூட்ட முடியாது என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.
சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடத்த ஐந்தில் ஒரு பங்கு பொதுக்குழு உறுப்பினர் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் மட்டுமே கோரிக்கை முன்வைக்க முடியும் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார். கூட்டத்தை கூட்ட அதிகாரம் இல்லாத அவை தலைவருக்கு ஐந்தில் ஒரு பங்கினர் தான் கடிதம் கொடுத்து, ஜூலை 11 பொதுக்குழு கூட்டம் என்பது நடைபெற்றதாக அவர் சுட்டிக் காட்டி இருக்கிறார்.
ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஒருவர் மறுத்தாலும் கூட பொதுக்குழு கூட்டம் கூட்ட முடியாது. அது சட்டவிரோதமானது என அவர் தெரிவித்திருக்கிறார். எனவே ஜூலை 11ஆம் தேதி நடந்த பொதுக்குழு தகுதியான நபரால் கூட்டப்படவில்லை என்று தெரிவித்து இருக்கின்றார்.
மேலும் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி ஜூன் 23இல் காலாவதியாகிறது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது, அது ஒரு கற்பனையானது, அடிப்படை இல்லாதது என்ற தன் தீர்ப்பில் தெரிவித்து இருக்கிறார். மேலும் ஒருங்கிணைப்பாளர் இல்லை என்றால் அவசர நடவடிக்கைகளை கட்சியில் மேற்கொள்ள வகை செய்யும் விதிகள் பொதுக்குழுவை கூட்ட தற்காலிக அவை தலைவருக்கு உரிமை வழங்கவில்லை என்றும், அந்த கட்சியினுடைய விதிகளை மேற்கோள்காட்டி இந்த தீர்ப்பிலே அவர்கள் குறிப்பிட்டிருக்கிறார்.
மேலும், ஒற்றை தலைமை தான் வேண்டும் என்பதில் எந்த புள்ளிவிவர அடிப்படையும் இல்லை என்றாலும், நான்கரை ஆண்டு காலமாக முதலமைச்சராக – துணை முதலமைச்சர் ஆக இவர் இருந்து அனைத்து நடவடிக்கையும் மேற்கொண்டுள்ளார்கள். இந்த நிலை விதியில் திடீரென்று ஒன்றரை கோடி தொண்டர்கள் ஒற்றை தலைமை வேண்டும் என்று முடிவு செய்வது எப்படி ? அதுமட்டுமல்லாமல் அந்த ஒன்றரை கோடி உறுப்பினர்களுடைய மனநிலையை பொதுக்குழு உறுப்பினர்கள் 2500 பேர் பிரதிபலித்தார்களா ? என்பதை கேள்வியாக எழுப்பி இருக்கிறார்.
கட்சி தலைமை விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது என்றும், ஆனால் கட்சியினுடைய தலைமை தேர்வு நடைமுறையில் ஏதேனும் விதிமீறல் இருந்தாலும் நீதிமன்றம் தலையிட முடியும் என்று குறிப்பிட்டிருக்கிறார். செல்லாத பொதுக்குழு முடிவுகளை அனுமதித்தால் கட்சி தொண்டர்களுக்கு கடுமையான பாதிப்பு ஏற்படுத்தும் என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார். அதுமட்டுமல்லாமல் இரு தலைவர்கள் மோதல் காரணமாக உள்ளாட்சித் தேர்தலில் அங்கீகரிக்கப்பட்ட இரட்டை இலை சின்னத்தையே பெற முடியவில்லை என்றும், நீதிபதி ஜெயச்சந்திரன் குறிப்பிட்டு இருக்கிறார்.
எனவே இந்த பொதுக்குழுவிற்கு தடை விதிக்கவில்லை என்றால் எடப்பாடி பழனிச்சாமி இயக்கத்தில் சவுகரியமாக அமர்ந்து விடுவார். இதனால் ஓபிஎஸ் உள்ளிட்டவர்கள் பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிட முடியாத ஒரு நிலைமை ஏற்பட்டுவிடும் என்று தெரிவித்திருக்கிறார். ஒற்றை தலைமை குறித்து முடிவு செய்ய கட்சி விதிகளை திருத்தம் செய்ய ஒருங்கிணைப்பாளர் இணைந்து பொதுக்குழுவை கூட்ட எந்த தடையும் இல்லை என்றும்,
தெரிவித்து இருக்கிறார். மேலும் பொதுக்குழு உறுப்பினர்களில் ஐந்தில் ஒரு பங்கினர் முறைப்படி பொதுக்குழுவை கூட்டல் கேட்டாள் மறுக்கக்கூடாது என்றும் சுட்டிக்காட்டி இருக்கிறார்.பொதுக்குழு கூட்ட இருவரும் மறுக்கும் நிலையில், பிரச்சனை ஏற்பட்டால், பொதுக்குழுவை நடத்த அதிகாரியை நியமிக்க உயர் நீதிமன்றத்தை அணுக வேண்டும் எனவும் தனது தீர்ப்பில் நீதிபதி தெரிவித்துள்ளார்.