Categories
கொரோனா

எச்சரிக்கை..!! நாய் வளர்க்கிறீர்களா….? வேகமாக பரவும் அடுத்த வைரஸ்…. அதிர்ச்சியில் மக்கள்….!!

  • ­நாய்களிடையே  புதிதாக  பர்வோ வைரஸ் பரவி வருவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று நாடு முழுவதும் பரவி ஏராளமான உயிர்களை எடுத்து வருகிறது.இதனிடையே இந்தியாவில் பறவை காய்ச்சலும் பரவத் தொடங்கி ஏராளமான பறவைகள் உயிரிழந்தன. இந்நிலையில் புதிதாக மற்றொரு வைரஸ் மக்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது .உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள கான்பூர் பகுதியில் நாய்களுக்கு பர்வோ என்ற வைரஸ் பரவி வருவதாக தகவல் வெளிவந்துள்ளது.

மேலும் இந்த வைரஸிற்கு 8 நாய்கள் பலியானதால் மக்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். மேலும் பர்வோ வைரஸினால் இறந்த நாய்களை பரிசோதனை செய்கையில் இவ்வைரஸ் நாய்களின் இரைப்பை மற்றும் குடலை சிதைத்து விட்டதாகவும் இறப்பதற்கு முன் ரத்தவாந்தி எடுத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.பர்வோ வைரஸ் உயிர்கொல்லி வைரஸ் எனவும் இது மிக வேகமாக பரவி பிரச்சினைகளை உண்டாக்கக்கூடியது என்றும் கூறப்படுகிறது. இதனால் கான்பூர் மக்களிடையே பதற்றம் நிலவுகிறது.

Categories

Tech |