புனே நகரில் தங்க ரேசர் பயன்படுத்தி சலூன்கடையில் முடித்திருத்தும் சம்பவம் வாடிக்கையாளரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்று காலக்கட்டத்தில் அனைவரும் வேலை வாய்ப்பின்றி வீட்டில் இருந்தார்கள், பலரின் வாழ்க்கை தரம் ஏழ்மை நிலைக்கு புரட்டி போடும் நிலைக்கு வந்தது. இதனால் நடுத்தர மக்களும், பாமர மக்களும் மிகவும் பாதிப்புக்குள்ளானார்கள். கொரோனா தொற்று குறைந்த நிலையில் நாடு முழுவதும் இயக்க நிலையை எட்டியது.
நாடு முழுவதும் கடைகள் திறந்தாலும் கொரோனா தொற்றுக்கு முந்திய காலங்களை போல மக்களின் கூட்டம், பணப்புழக்கம் கடைகளை நோக்கி வர வில்லை. இதனால் பல்வேறு தொழில் நிலையங்கள் வாடிக்கையாளர்களை கவர சலுகைகளை அறிவித்து வந்தனர். அப்படி கடையின் உரிமையாளர் மேற்கொண்ட புது முயற்சி இந்தியா முழுவதும் பேசபட்டு வருகின்றது.
புனேவில் பிம்பிரிசின்சுவாட்டை சேர்ந்த அவினாஷ் போருண்டியா சலூன் கடை ஒன்றை நடத்தி வருகின்றார். இவர் தனது கடையின் வாடிக்கையாளரை கவருவதற்காக, ரூபாய் 4 லட்சம் மதிப்பிலான 80 கிராம் எடையுள்ள தங்க ரேசரை பயன்படுத்தி முடி சவரம் செய்து வருகின்றார். தங்கத்தாலான ரேசரை பயன்படுத்தி முடி திருத்தம் செய்தலும் வெறும் 100ரூபாய் மட்டுமே கட்டணம் வாங்குவது இவரின் கடையை நோக்கி பலரின் பார்வை திரும்பியுள்ளது.