புதிதாக உருமாற்றம் அடைந்துள்ள ஒமைக்ரான் வைரஸ் எக்ஸ்இ (XE) அதிக அளவில் பரவக் கூடியது என்று தகவல் வெளியாகி உள்ளது.
இங்கிலாந்தில் ஒமைக்ரான் பிஏ.1, பிஏ.2. வைரஸின் உரு மாற்றங்களின் கலப்பின மான ‘ஒமைக்ரான் எக்ஸ்இ (XE)’ என்ற வைரஸ் உருவாகி அந்நாட்டில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த வைரஸ் கிருமிகளால் வைரசை விட அதிக அளவில் பரவக்கூடிய தன்மை வாய்ந்தது. இருப்பினும் இந்த வைரஸ் ஆபத்தானதாக தெரியவில்லை.
இந்த நிலையில் மும்பையில் இருந்து வதோதராவுக்கு (குஜராத்) சென்ற ஒருவருக்கு இந்த புதிய வகை வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஒமைக்ரான் எக்ஸ்இ (XE) வைரஸ் மாதிரியின் மரபணு பகுப்பாய்வு பரிசோதனை நடந்து வருவதாகவும் விரைவில் பரிசோதனை குறித்த தகவல் தெரிய வரும் என மத்திய சுகாதார அமைச்சகம் வட்டாரம் தெரிவித்துள்ளனர்.