Categories
அரசியல் மாநில செய்திகள்

தாய்மார்களே..! ”இது உங்களுக்கான வெற்றி’ தமிழகமே கொண்டாடுங்க ….!!

தமிழகத்தில் டாஸ்மார்க் மதுக்கடைகளை திறக்க கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதற்கு பலரும் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர் .

தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகம் பாதித்த பகுதிகள் மற்றும் சென்னை மாவட்டம் தவிர்த்து பிற பகுதிகளில் உள்ள டாஸ்மாக் மது கடைகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு உத்தரவிட்டது. இந்த உத்தரவை அடுத்து நேற்றும், இன்றும் மது விற்பனை தமிழகத்தில் ஜோராக நடைபெற்றன. அதேநேரத்தில் உயர்நீதிமன்றம் பிறப்பித்த வழிகாட்டல்கள் மது விற்பனையில் மீறப்பட்டதுள்ளதாக பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன.

 

இதனைத் தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் டாஸ்மாக் மதுக்கடைகளை ஊரடங்கு உத்தரவு முடியும் வரை திறக்கக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய தயாராகி கொண்டிருக்கின்றது.

இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை வரவேற்று அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், டாஸ்மாக் கடையை மூட நீதிமன்றம் உத்தரவிட்டது தமிழ் தாய்மார்களின் குரலுக்கான வெற்றி. நீதிமன்றத்தின் மீது நம்பிக்கையும், சத்தியமே வெல்லும் என்று நிரூபித்து இருக்கிறது. இந்த உத்தரவு மக்கள் நீதி மையம் மட்டும் பெற்ற வெற்றி அல்ல தமிழகமே கொண்டாட வேண்டிய வெற்றி என்று கருத்து தெரிவித்துள்ளார்.

 

Categories

Tech |