Categories
இந்து ராசிபலன் லைப் ஸ்டைல் ஜோதிடம்

ஆண்கள் உடலில் இந்த இடத்தில் மச்சம் இருந்தால் “பெண்களிடம் மிகுந்த பாசமாக பழகுவார்”!!

மச்சங்கள் நம்முடைய உடலில் இயற்கையாகவே தோன்றக் கூடியவை பிறக்கும்போதே மச்சம் இருக்கும். சில மச்சங்கள் உடலில் திடீரென உண்டாகும், உடலில் மச்சங்கள் எந்த இடத்தில் வேண்டுமானாலும் தோன்றும் மச்சங்கள் பற்றி மக்கள் மத்தியில் பல்வேறு நம்பிக்கைகள் உள்ளன மச்சங்கள் அதிர்ஷ்டத்தை தரும் என்றும் கூறுவார்கள்.

ஆண்களின் உடலின்  எந்த பகுதில் மச்சம் இருந்தால் என்னென்ன நன்மைகள் உண்டு என்ற சிலவற்றை இந்த குறிப்பில் பார்க்கலாம்.

நெற்றி

நெற்றியின் வலது  புறத்தில் மச்சம் இருந்தால் எதிர்பாராத நன்மை கிடைக்கும்.

புருவம்

வலது புருவத்தில் மச்சம் இருந்தால் அதிஷ்டகரமான மனைவி கிடைக்கும். இரு புருவங்களுக்கு நடுவில் மச்சம் இருந்தால் நீண்ட ஆயுளுடன் இருப்பீர்கள்.

இடது புருவத்தில் மச்சம் இருந்தால் வாழ்க்கையில் ஏற்ற இறக்கங்கள் வரும். அதிகம் செலவு செய்யக்கூடிய ஆளாக இருப்பீர்கள்.

கண்

வலது கண்ணுக்குள் வெண்படலத்தில் மச்சம் இருந்தால் அதிக ஆன்மீக சிந்தனை கொண்டு  புகழ் பெற்று விளங்குவர்.

இரு கண்களில், ஏதெனும் ஒன்றில் வெண்படலத்தின் கீழ் புறத்தில் மச்சம் இருப்பின்  பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டிய சூழ்நிலை நிலைஉண்டாகும்.

இடது கண் வெண்படலத்தில் மச்சமிருந்தால்  வாழ்க்கையில் வறுமையான  நிலை உண்டாகும். இருப்பினும், அது மட்டுமின்றி எதையும் சமாளிக்கும் பக்குவமும் இருக்கும்.

மூக்கு

மூக்கின் மேல் பகுதியில் மச்சம் இருந்தால் அவர்கள் சகல வசதிகளையும் பெறுவர்.

மூக்கின் வலதுபுறத்தில் மச்சம் இருந்தால் நினைத்ததை நடத்தி முடிக்கும் ஆற்றல் உடையவர்களாக இருப்பர்.

மூக்கின் இடது புறத்தில் மச்சம் இருந்தால் எதையும் நம்பாதவர்களாக இருப்பார்கள். தவறான பெண்ணின் நட்பு இவர்களுக்கு இருக்கும்.

கன்னம்

ஆண்களுக்கு இடது பக்க கன்னத்தில் மச்சம் இருப்பின் வறுமை, உயர்வு என இரண்டு அவரது வாழ்க்கையில்  மாறி, மாறி  வரும்.

காது

வலது காதின்  மேல் நுனியில் மச்சம் இருந்தால் தண்ணீரில் கண்டம் இருக்கக்கூடும்.

இடது காதின் மேல் நுனியில் மச்சம் இருந்தால் பெண்கள் சம்பந்தமான விஷயங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

இரண்டு காதுகளிலும் மச்சம் இருந்தால் அவர் அதிர்ஷ்டக்காரர். பேச்சுதிறன், பிறரை வசீகரிக்கும் ஆற்றல், செல்வம் எல்லாமும் அவரை வந்து சேரும்.

உதடு

மேல் மற்றும் கீழ் உதடுகளில் மச்சம் இருந்தால் காதல் மற்றும் அலட்சியமான செயல்களில் ஈடுபடுவீர்கள்.

உதட்டுக்கு மேல் இருந்தால் நல்ல வசதியாக இருப்பீர்கள் மற்றும் இசை, கலைத்துறையில் அதிக நாட்டம் உடையவர்களாக இருப்பீர்கள்.

கழுத்து

கழுத்தின் வலதுபுறத்தில் மச்சம் இருந்தால் பெயரும், புகழும், சொத்தும்  நண்பர்களின் மூலம் கிடைக்கும்.

கழுத்தின் இடது புறத்தில் மச்சம் இருந்தால் அதிக வசதியும், அதிக வறுமையும் இல்லாமல் நடுத்தரமான வாழ்க்கையை  வாழ்வர்.

தொண்டையில் மச்சம் இருந்தால் திருமணத்தின் மூலமாக  அவர்களுக்குச் சொத்து கிடைக்கும்.

தோள்

ஆண்களுக்கு வலது தோளில் மச்சம் இருந்தால் சின்ன சின்ன விஷயக்களுக்கு கூட மனதை அலட்டிக் கொள்வார்.

மார்பு

இடது மார்ப்பில் மச்சம் இருந்தால் ஆண் குழந்தைகள் நிறைய பிறக்கும். பெண்களிடம் மிகுந்த பாசமாக பழகுவார்.

வலது மார்பில் மச்சம் இருந்தால் அவர் வாழ்க்கை நடுத்தரமாக இருக்கும். பெண்கள் குழந்தைகள் நிறைய பிறக்கும்.

 

உள்ளங்கை

புத்திக்கூர்மை உடையவராக இருப்பார்கள் அவர்களின் வாழ்க்கை செல்வ செழிப்புடன் இருக்கும். உயர் பதவியை அடைவார்கள் தன்னம்பிக்கை கொண்டவர்களாக அளவான நிறைவான வாழ்க்கையையும் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். நினைத்ததை நடத்தி முடிப்பார்கள்.

வயிறு

வயிற்றின் மீது மச்சம் உள்ளவர்கள் பொதுவாக பெறாமை குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். மேலும் தன்னுடைய தகுதியை மீறிய ஆசை இருக்கும்.

வயிற்றின் இடப்புறத்தில் மச்சமிருந்தால் நல்ல குணங்களையும் உழைத்து வாழ விரும்பும் எண்ணம் கொண்டவர்களாக இருப்பர்.

தொப்புள்

நினைத்த வாழ்க்கையை அடைவார்கள், உழைத்து வாழும் எண்ணம் கொண்டவர்கள். இவர்களுக்கு வசதி வாய்ப்புகள் தானே தேடிவரும். இவர்களின் பேச்சாலேயே அனைவரையும் கவரக் கூடியவர்கள்

முதுகு

முதுகுப் பகுதியில் ஆண்களுக்கு மச்சம் இருந்தால் சிறப்பான வாழ்க்கை அமையும். மன நிறைவுடனும் பக்தியுடனும் வாழ்க்கையை வாழ்பவர்கள்.

இவர்கள் அனைவரிடமும் அன்போடு பழகுவர். பணச்சேர்க்கையில் தட்டுப்பாடே இருக்காது. உயர்வான வாழ்க்கையும் செல்வச் செழிப்பும் அதிகமாக இருக்கும்.

உள்ளங்கால்

உள்ளங்காலில் மச்சம் இருப்பவர்கள் மிகுந்த புகழ் உடையவர்களாக இருப்பார்கள். கவிதை எழுதும் ஆற்றல் பெற்றவர்கள், சங்கீதத்தில் ஈடுபாடு உடையவராக இருப்பார்கள். அரசாங்க உத்தியோகத்தில் உயர் பதவியில் இருப்பார்கள். அமைதியான வாழ்க்கையைப் பெற்றிருப்பார்கள்.

Categories

Tech |